உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒவ்வொரு சாவடி வாரியாக ஓட்டுப்பதிவு வெளியீடு யாருக்கு சாதகம் என ஆய்வு

ஒவ்வொரு சாவடி வாரியாக ஓட்டுப்பதிவு வெளியீடு யாருக்கு சாதகம் என ஆய்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில், 15 சட்டசபை தொகுதிகளில், 80 சதவீதத்திற்கும் அதிகமான ஓட்டுகள் பதிவாகி உள்ளன. ஓட்டுச்சாவடி வாரியாக பதிவான ஓட்டுகள் அடிப்படையில், எந்த வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு என, அரசியல் கட்சிகள் கணக்கிட்டு வருகின்றன.தமிழகத்தில் உள்ள, 39 லோக்சபா தொகுதிகளுக்கும், கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும், கடந்த 19ம் தேதி தேர்தல் நடந்தது. குறைவான ஓட்டுகள்இதில் தர்மபுரி லோக்சபா தொகுதியில் மட்டும், 80 சதவீதத்திற்கும் அதிகமான ஓட்டுகள் பதிவாகின. தென் சென்னை, மத்திய சென்னை தொகுதிகளில், 60 சதவீதத்திற்கும் குறைவான ஓட்டுகள் பதிவாகின.லோக்சபா தொகுதிகளுக்கு உட்பட்ட, 234 சட்டசபை தொகுதிகளில், தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டசபை தொகுதியில் அதிகபட்சமாக, 84.94 சதவீத ஓட்டுகள் பதிவாகிஉள்ளன. மொத்தம் 15 சட்டசபை தொகுதிகளில், ஓட்டுப்பதிவு 80 சதவீதத்தை தாண்டி உள்ளது.வெற்றி வாய்ப்புமேலும், 48 சட்டசபை தொகுதிகளில், 75 முதல் 80 சதவீதம்; 69 தொகுதிகளில் 70 முதல் 75 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி உள்ளன; 25 தொகுதிகளில், 60 சதவீதத்திற்கும் குறைவாகவும், மற்ற தொகுதிகளில், 60 முதல் 70 சதவீத ஓட்டுகளும் பதிவாகி உள்ளன. ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும், ஓட்டுச்சாவடி வாரியாக பதிவான ஓட்டுகள்; ஆண்கள், பெண்கள் மொத்த ஓட்டு, பதிவான ஓட்டுகள் விபரம் வெளியாகி உள்ளன. அவற்றின் அடிப்படையில், எந்த வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என, அரசியல் கட்சிகள் கணக்கிட்டு வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

K Subramanian
ஏப் 25, 2024 11:28

Let this man better wear a kulla and go for Koozhu drinks with the other commmunity He does not have any qualification to complain about Modiji who has no parallel which Edapadi should note please


V GOPALAN
ஏப் 25, 2024 09:40

Re election with full Army support in entire Tamilnadu is the only way Modi should have brought governor rule and then should conduct re election before th June


SUBBU,MADURAI
ஏப் 25, 2024 08:58

வாக்கு சதவீதம் குறைந்ததால் அது எதிர்கட்சியான பாஜகவிற்கு பாதகமாவும் ஆளும்கட்சியான திமுகவிற்குத்தான் சாதகம் என்று பரவலாக பேசப்படுகிறது பத்திரிக்கை செய்திகளும் அதைத்தான் தெரிவிக்கின்றன. ஆனால் எல்லா நேரத்திலும் அப்படி நடக்க வாய்ப்பில்லை ஆளும் திமுக அரசின் மீதுள்ள வெறுப்பினால் அது எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாகவும் இருக்க வாய்ப்பு உண்டு என்பது நமது கருத்தாகும். உதாரணத்துக்கு சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் சட்டீஸ்கர் மாநிலத்தில் ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சிதான் ஏற்கனவே ஆட்சியில் இருந்தது அங்கே நடந்த தேர்தலில் மிகக் குறைவான 46 சதவீதம் அளவுதான் ஓட்டுக்கள் பதிவாகின தமிழகத்தை போல் நிறைய பேர் வாக்களிக்க வரவில்லை. இதனால் அங்கு 46 சதவீதமே பதிவானதால் ஆளும் காங்கிரஸ் அரசுதான் மீண்டும் உறுதியாக வெற்றி பெரும் என்று எக்ஸிட் போல் நடத்தி அனைத்து பத்திரிக்கைகளும் டிவிக்களும் தெரிவித்தன. ஆனால் ரிசல்ட்டில் இவர்களின் கணிப்பு அனைத்தும் தலைகீழாக மாறி அங்கு எதிர்கட்சியான பாஜக மொத்தமுள்ள 90 தொகுதிளில் அதிகபட்சமாக 54 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது ஆளுங்கட்சியான காங்கிரஸ் வெறும் 36 இடங்களை பெற்று ஆட்சியை இழந்தது. எனவே 19.ம் தேதியன்று நடந்த தமிழக பாராளுமன்ற தேர்தலில் குறைந்த வாக்கு சதவீதமே பதிவாகியிருக்கிறது என்பதாலேயே ஆளுங்கட்சி திமுக மீண்டும் அனைத்து தொகுதிகளையும் வென்று எதிர்கட்சிகள் தோற்றுவிடும் என்ற கருத்து கணிப்பு இந்த முறை கண்டிப்பாக பொய்த்துப் போகும். குறிப்பாக கோயமுத்தூரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் மொத்தம் ஆறு லட்சம் ஓட்டுகளுக்கு மேல் வாங்குவார். மேலும் சுமார் ஒரு லட்சம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் உறுதியாக வெற்றி பெறுவார். சதவீதக் கணக்கில் பார்த்தால் அவர் வாங்கும் ஓட்டு 40 சதவீதத்திற்கும் அதிமாகத்தான் இருக்கும்.


Yes your honor
ஏப் 25, 2024 08:40

சுடலைக்கான் தேர்தலை நேர்வழியில் சந்தித்து இருக்கலாம் கடந்த தேர்தலை நடத்தியது மாதிரியான ஒரு கேவலமான முறையில் தேர்தலை நடத்திடுவதை சத்தியப்பிரதா சாஹு என்னும் கழக ரூபாய் உடன்பிறப்பு மாற்றிக்கொள்ள வேண்டும் ஒரு கண்ணியமான தேர்தல் அதிகாரி தமிழ்நாட்டிற்கு வராதவரை கயவர்களின் கூத்து சிறிது ஓவராகத் தான் இருக்கும் ஜூன் -ம் தேதிக்கு பிறகு இவை எல்லாவற்றிற்கும் உண்மையான விடியல் உண்டு அதுவரை பொறுத்திருப்போம்


Duruvesan
ஏப் 25, 2024 07:24

விடியளு உற்சாகம் தீயமுக என விகடன் தந்தி முரசொலி லயோலா The ஹிந்து கருத்து கணிப்பு கண்டு விடியல் மந்திரி சபை முடிவு செய்து விட்டார் விடியல் பிரதமர் ஆவது உறுதி என உபிஸ் குதூக்கலாம்


Kasimani Baskaran
ஏப் 25, 2024 06:13

பங்காளிகளின் வாக்கு கனிசமாக குறைந்திருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும் அவர்களின் வாக்கு வங்கி சரிந்தாலே அது தோல்வியாக எடுத்துக்கொள்ளப்படும் அரை நூற்றாண்டு பங்காளி அரசியலுக்கு முடிவுரை எழுதுவது அவ்வளவு எளிதல்ல பாஜகவை பொருத்தமட்டில் எத்தனை மந்திரிகள் சிறை செல்கிறார்கள் என்பதுதான் வெற்றியின் அளவுகோல் உயர் கல்விக்கு குறுக்கிட்டது போல எல்லா மந்திரிக்கும் உச்சநீதிமன்றத்தால் முட்டுக்கொடுக்க முடியாது க்குள் பத்து மந்திரிகளாவது உள்ளே போவார்கள் என்பது நிச்சயம்


Dharmavaan
ஏப் 25, 2024 06:53

சிறை செல்வது முக்கியம் அல்லசொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும்


Pdushendran
ஏப் 26, 2024 07:34

yes confirm


மேலும் செய்திகள்







புதிய வீடியோ