உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மரம் நடுங்கள் கட்சியினருக்கு அண்ணாமலை உத்தரவு

மரம் நடுங்கள் கட்சியினருக்கு அண்ணாமலை உத்தரவு

சென்னை:'அன்னையின் பெயரில் மரம் நடுவோம் நிகழ்ச்சியின் கீழ், ஒவ்வொரு மாவட்டத்திலும் கிளை நிர்வாகிகள் முதல் மாநில நிர்வாகிகள் வரை அனைவரும் ஒரு மரமாவது நட வேண்டும்' என, கட்சியினருக்கு தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க விவசாய அணி நிர்வாகிகளை உள்ளடக்கிய, ஏழு பேர் குழுவை நியமித்துள்ளார்.மேலும், சுதந்திர தினத்தை முன்னிட்டு, வரும் 15ம் தேதி வீடுகள் தோறும் தேசிய கொடி ஏற்றுமாறும் கட்சியினரை, அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார். இது தவிர, லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு ஓட்டளித்த மக்களுக்கு, இம்மாதம் 18ம் தேதி வீடு வீடாக சென்று நன்றி தெரிவிக்குமாறும் தெரிவித்துள்ளார். ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை