உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மீண்டும் ஸ்டிக்கர் ஒட்ட முயற்சி: தி.மு.க., மீது பாயும் அண்ணாமலை

மீண்டும் ஸ்டிக்கர் ஒட்ட முயற்சி: தி.மு.க., மீது பாயும் அண்ணாமலை

சென்னை : 'தி.மு.க.,வின் ஒரே சாதனை, கட்டாய கல்வி திட்டத்தின் கீழ் பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியை, மழலையர் வகுப்புகளுக்கு வழங்காமல் இருந்தது தான்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: தி.மு.க., ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளில், மாநில வளர்ச்சிக்கோ, மக்கள் நலனுக்கோ எந்த திட்டங்களையுமே செயல்படுத்தவில்லை; கொடுத்த வாக்குறுதிகளையும் முழுதுமாக நிறைவேற்றவில்லை.வெறும் விளம்பரங்களை வைத்தே காலம் ஓட்டி கொண்டிருக்கும் 'ஸ்டிக்கர்' மாடல் தி.மு.க., அரசின் முதல்வர் ஸ்டாலின், மீண்டும் ஒரு முறை மத்திய அரசின் திட்டங்களுக்கு, ஸ்டிக்கர் ஒட்ட முயன்றுள்ளார்.பள்ளி கல்வி முன்னேற்றத்திற்கான மத்திய அரசின், 'சமக்ரா சிக் ஷா திட்டத்தின் கீழ் மூன்று ஆண்டுகளில் தமிழகத்திற்கு வழங்கப்பட்ட நிதி, 5,858.32 கோடி ரூபாய். தி.மு.க.,வின் சாதனைகளாக முதல்வர் காட்டி கொள்ள முயற்சிப்பவை அனைத்துமே, சமக்ரா சிக் ஷா திட்டத்தின்படி, மத்திய அரசின் நிதியில் நிறைவேற்றப்பட்டவை தான். பள்ளி கல்வியில், தி.மு.க.,வின் ஒரே சாதனை கட்டாய கல்வி திட்டத்தின் கீழ் பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியை, இரு ஆண்டுகளாக மழலையர் வகுப்புகளுக்கு வழங்காமல் இருந்தது தான். உண்மை இப்படி இருக்க, சிறிதும் கூச்சமே இல்லாமல் அவற்றை தி.மு.க.,வின் சாதனையாக காட்டி கொள்ள முயற்சிப்பது, நகைப்பை ஏற்படுத்துகிறது.சமக்ரா சிக் ஷா திட்டத்தின் கீழ் நிதியை பயன்படுத்தி, பள்ளிகளுக்கான ஸ்மார்ட் வகுப்பறை திட்டத்திற்கான, 1,000 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தத்தை, தமிழக அரசு நிறுவனமான, 'எல்காட்' நிறுவனத்திற்கு வழங்காமல், கேரள மாநில அரசு நிறுவனமான, 'கெல்ட்ரான்' நிறுவனத்திற்கு வழங்கியதன் பின்னணியை முதல்வர் தெளிவுபடுத்துவாரா?இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Srinivasan
ஜூன் 01, 2024 18:01

நம்முடைய வரியிலிருந்து தரப்படும் நிதி தானே அது. உங்கள் உளறல்களைக்கேட்டு சலிப்பு தான் மிச்சம். வெட்டிச்சவடால்கள் நிறைவேற்ற இயலாத வீரவசனங்கள். ஒரு நாளைக்கு 100 கொடிக்கம்பங்கள் வீதம் 100 நாட்கள் நிறுவிய பின்னர் இறுதியில் என் வீட்டெதிரே இதே இடத்தில் நான் கொடிக்கம்பம் நிறுவி கொடியேற்று வேன் என்ற சூளுரை என்னவானது.?


MP.K
ஜூன் 01, 2024 11:54

இந்தியாவுக்கு பத்து ஆண்டுகளாக என்ன செய்தீர்கள் ?


Aaniraichelvi
ஜூன் 01, 2024 14:06

தமிழ் நாட்டுக்கு ஒண்ணும் செய்யாத நம்ம பகுத்தறிவு முதல்வர் இந்தியாவுக்கு என்ன செய்ய போகிறார்????


venkat eswaran
ஜூன் 01, 2024 09:01

ஸ்டிக்கர் தவிர வேறு என்ன தெரியும் ..


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை