மேலும் செய்திகள்
உரிமைத் தொகை எனும் உருட்டு இனி எடுபடாது; நயினார் நாகேந்திரன்
1 hour(s) ago | 1
மகளிர் உரிமைத்தொகை உயரும்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு
1 hour(s) ago | 3
சென்னை:தமிழக கவர்னர் மாளிகை சார்பில், சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பிரிவில், 'கவர்னர் விருதுகள் - 2024' பெற, ஆக., 9க்குள் விண்ணப்பிக்கலாம்.சமூக நல்வாழ்வை மேம்படுத்த, சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிக்க, முன்மாதிரியான பங்களிப்புகளை அளித்த தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களின், தன்னலமற்ற சேவைகளை அங்கீகரிக்க, இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இரு பிரிவுகளிலும் தலா நான்கு பேர் தேர்வு செய்யப்படுவர்.நிறுவனங்கள் பிரிவில் தேர்ந்தெடுக்கப்படும் தொண்டு நிறுவனத்திற்கு, 5 லட்சம் ரூபாய் ரொக்கம், விருது; தனி நபர் பிரிவில் தேர்வாவோருக்கு, 2 லட்சம் ரூபாய் ரொக்கம், விருது, குடியரசு தினத்தன்று கவர்னரால் வழங்கப்படும்.விண்ணப்பிக்க விரும்புவோர், ஆகஸ்ட், 9 மாலை 5:00 மணிக்குள், https://tnrajbhavan.gov.inஎன்ற இணையதளத்தில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து, gmail.comஎன்ற இ - மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும். துணை ஆவணங்களுடன் விண்ணப்பத்தின் நகலை, கவர்னரின் துணை செயலர் மற்றும் கணக்காயர், கவர்னர் செயலகம், கவர்னர் மாளிகை, கிண்டி, சென்னை - 22 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
1 hour(s) ago | 1
1 hour(s) ago | 3