உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்டவிரோத ஆயுத விற்பனை முக்கிய குற்றவாளி கைது

சட்டவிரோத ஆயுத விற்பனை முக்கிய குற்றவாளி கைது

சமல்கா: சட்டவிரோத ஆயுதங்கள் சப்ளை செய்து வந்தவரை போலீசார் கைது செய்தனர். தேசிய தலைநகரில் உள்ள வெளிநாடுகளைச் சேர்ந்த ஒரு கும்பலுக்கு சட்டவிரோதமாக ஆயுதங்கள் சப்ளை செய்ய ஒருவர் முயற்சி செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன்பேரில் தென்மேற்கு டில்லியில் உள்ள சமல்கா அருகே போலீசார் காத்திருந்தனர். அங்கு வந்த சந்தேக நபரை போலீசார் சுற்றிவளைத்துப் பிடித்தனர்.அவரை சோதனை செய்ததில், அவரிடம் 10 அதிநவீன கைத்துப்பாக்கிகள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்தனர். அவர் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக சட்டவிரோத ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்தது.அவர் ஒரு துப்பாக்கி 12,000 ரூபாய் என்ற விலையில் வாங்கி, டில்லி, என்.சி.ஆர்., பகுதிகளில் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை விற்பனை செய்து வந்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை