உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆளவந்தார் நிலத்தை காப்பாற்ற அசோக் சிங்காலாக மாறவும் தயார் : பா.ஜ., மூத்த தலைவர் ராஜா

ஆளவந்தார் நிலத்தை காப்பாற்ற அசோக் சிங்காலாக மாறவும் தயார் : பா.ஜ., மூத்த தலைவர் ராஜா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாமல்லபுரம்: செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் இயங்கும் ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமாக, 1,054 ஏக்கர் நிலம் கடலோரப் பகுதிகளில் உள்ளது; ஹிந்து சமய அறநிலையத் துறை பராமரித்து நிர்வகிக்கிறது. ஆளவந்தாரின் குருபூஜை விழா, அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்நாளான நேற்று, திருவாய்மொழி, திவ்ய பிரபந்த சேவையுடன் குருபூஜை நடத்தப்பட்டது.ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி பொன்.மாணிக்கவேல், வன்னியர் இனத்தைச் சேர்ந்த ஆளவந்தாரின் நிலத்தை, அறநிலையத் துறையிடமிருந்து மீட்க வேண்டுமென வலியுறுத்தும் வன்னிய குல ஷத்திரிய சமூக சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவினர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில், தமிழக பா.ஜ., மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேசியதாவது:அடுத்த ஆண்டு குருபூஜையில், ஒரு லட்சம் பேரை திரட்டி வந்து பலம் காட்ட வேண்டும். லட்சம் பேர் கூடினால், 1,000 ஏக்கர் நிலத்தை திருப்பி தந்து விடுவர்.கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின், 146 ஏக்கர் நிலத்திற்கு வாடகையாக, 4 லட்சம் ரூபாய் தான் அறக்கட்டளைக்கு அளிக்கின்றனர். மார்க்கெட் மதிப்பிற்கே வாடகை அளிக்க வேண்டும்.அறநிலையத் துறை விதிகளின்படி, ஹிந்து கோவில் சொத்துக்களை காப்பாற்றாத இணை கமிஷனர்கள், கடமை தவறியவர்கள் என நீதிமன்றமே கூறியுள்ளது. அவர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.ஹிந்து விரோத தீய அரசு மாநிலத்தில் உள்ளது; மெட்ரோவிற்காக கோவிலை இடிக்க முயற்சிக்கிறது. நாமே ஆளவந்தார் நிலத்திற்கு வேலியிட வேண்டும். ஆளவந்தார் நிலத்தின் மீது, தமிழகத்தின் முதல் குடும்பத்தின் தீய பார்வை பதிந்துள்ளது. நாம் எல்லாரும் சேர்ந்து, இந்த இடத்தையும் அயோத்தியாக மாற்ற வேண்டும். அதற்காக, அசோக் சிங்காலாக மாற நானும் தயார். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

ஆரூர் ரங்
ஜூலை 26, 2024 10:57

நுங்கம்பாக்கம் பெருமாள் ஆலய நிலத்தை ஆக்கிரமித்து மாற்றுமத வழிபாட்டிடம் கட்டியுள்ளதை அகற்ற செயல் பாபுவிடம் கோரிக்கை விடுத்தபோது, அதனை அகற்ற முயன்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கூறி தப்பிக்க முயற்சிக்கிறார்.( அவர்கள் போட்ட பிச்சையிலமைந்த ஆட்சியாயிற்றே). இதே தவறை ஹிந்துக்கள் செய்தால் அன்றே இடிக்கப்படும்.


Sundaram Muthiah
ஜூலை 26, 2024 10:05

ராஜா ஒரு டம்மி பீசு. மொத்தமா 7 பேரு கூட இல்லை. இவரு லட்சம் பேரை கூப்பிடுறாராம். போயி வேலைய பாருங்க


Rpalnivelu
ஜூலை 26, 2024 10:50

200 குவாடெர் பிரியாணி உபிக்கு போதுமா


R.P.Anand
ஜூலை 26, 2024 09:38

தலைவா இன்னும் ஐந்து லட்சம் ஏக்கர் இருக்கு. எல்லா டாக்குமெண்ட்ஸ் மாத்தி முடிச்சாச்சு. அதற்காக ஆளும் போட்டாச்சு. எல்லாத்தையும் டிஜிட்டல் பண்றோம் பழைய ரெகார்ட் ஒன்னும் கிடைக்காது. என்னத்த பண்ண தலையெழுத்து....


Velan Iyengaar
ஜூலை 26, 2024 09:18

இல்ல இப்போ சிங்காலை அவமதிக்கிறாரா ?? பாராட்டுகிறாரா ???


Rpalnivelu
ஜூலை 26, 2024 10:53

ஏண் உனக்கு வக்ர புத்தி?


Mario
ஜூலை 26, 2024 08:10

மதத்தை மறந்து மனிதனாக மாறு முதலில்


karthik
ஜூலை 26, 2024 09:04

சரி சர்ச் ஆதிக்கத்தில் இருக்கும் அரசு நிலங்களை திருப்பி குடுக்க சொல்லு..


Venkatesan P
ஜூலை 26, 2024 09:22

முதலில் மனம் மாற வேண்டும்


Shekar
ஜூலை 26, 2024 09:23

ஓசி சோறுக்கு மதம் மாறாதே, இதை இந்தியர்கள் அனைவரும் உணரணும்


Shekar
ஜூலை 26, 2024 09:28

இதை கோவிலுக்கு எதிரே நின்னு புதிய, பழைய ஏற்பாடு கொடுப்பவனிடம் சொல்


Svs Yaadum oore
ஜூலை 26, 2024 07:46

தமிழ்நாடு முழுக்க ஆட்டைய போடும் விடியல் கும்பல் ஆயிரம் ஏக்கர் என்றால் சும்மா விடுமா? மொத்தமும் தின்று தீர்க்கும் .


Svs Yaadum oore
ஜூலை 26, 2024 07:45

இங்குள்ள தமிழ்ப்பற்றாளனுங்க எல்லாம் விடியல் கூட்டணி கட்சி வடக்கன் ஆரியன் டெல்லி இத்தாலி கும்பலிடம் சொல்லி கர்நாடக காவேரி பிரச்னையை உடனே தீர்த்துடுவானுங்க ...


INDIAN
ஜூலை 26, 2024 07:07

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கிளப் எனப்படும் சூதாட்ட இடமாகவும், மது அருந்தும் இடமான BAR ஆகவும் நடத்திக்கொண்டு, வாடகையும் தராது, இருந்த அந்த குறிப்பிட்ட ஒரு சில முற்பட்ட சமூக மக்களிடம் இருந்து அந்த இடத்தை மீட்க முடியாமல் நீதிமன்றம் வரை சென்று மீட்கப்பட்டது அப்போது இந்த ராஜா எங்கே போனார், திருச்சி ஸ்ரீரங்கம் மற்றும் கபாலீஸ்வரர் ஆலய கோயில் சிலைமாறாட்ட வழக்கில் தொடர்புடையவர்கள் உச்ச நீதிமாற்றம் வரை சென்று விசாரணை நடத்தவே தடையாணை பெற்று இருக்கிறார்களே அதற்க்கு ஏன் குரல் கொடுக்கவில்லை, திருவண்ணாமலை அம்மணி அம்மன் மடத்துக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து அனுபவித்து வந்த பாஜக ஆன்மீக அணி தலைவருக்கு எதிராக ஏன் குரல் கொடுக்கவில்லை தற்போது கூறும் ஆளவந்தார் நிலம் தற்போதைய திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான் 1500 ஏக்கர் இடமும் ஆக்கிரமிக்கப்பட்டதா, கண்டிப்பாக அப்படி இல்லை அப்போ இவ்வளவு நாள் எங்கே போனார் தமிழகத்தில் நடைபெற்ற சிலை திருட்டுகளில் 90 சதம் கோயிலுக்கு வேண்டப்பட்டவர்களால் நடைபெற்றதாக உச்ச நீதி மன்றமும், இதே பொன்மணிக்க வேலும் சிலைதடுப்பு பிரிவில் இருக்கும்போது கூறினார் அந்த 90 சதவிகிதம் பேருக்கு எதிராக ராஜா குரல் கொடுத்தாரா? மிக சிறப்பாக சிலைதடுப்பு குற்றங்களில் விசாரணை மேற்கொண்ட பொன்மாணிக்கவேலுவை அந்த பொறுப்பிலிருந்து விடுவித்தது அன்றய பாஜக மற்றும் அதிமுக அரசுகள் தானே. ஆகவே ராஜ இதுபற்றி பேச தகுதி அற்றவர் மேலும் அவர் பேச்சில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறது


Velan Iyengaar
ஜூலை 26, 2024 09:17

நெத்தியடி கருத்து பிரமாதம்.


ஆரூர் ரங்
ஜூலை 26, 2024 11:01

அங்கு கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் தீட்டி செயல்படுத்தியது திமுக அரசுதான். ஸ்ரீபெரும்புதூர் ஆலய நிலத்தில் ராஜீவுக்கு நினைவிடம் அமைத்தது காங்கிரசு. ஆக இனியும் ஹிந்துக்கள் சாதுவாக இருக்கக்கூடாது.


Priyan Vadanad
ஜூலை 26, 2024 06:57

மீட்டிங்கில் அடேய்ங்கப்பா எவ்வளவு கூட்டம் இந்த பாஜக தலைவருக்கு/ இந்த பெருங்கூட்டத்தை படத்தில் பார்க்கும் தமிழ்மக்கள், உடனே ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை மறந்து விடுவார்கள்.


sridhar
ஜூலை 26, 2024 07:19

பாண்டவர்கள் ஐந்து, கௌரவர்கள் நூறு, கடைசியில் வென்றது ஐந்து, தோற்று அழிந்தது நூறு.


Priyan Vadanad
ஜூலை 26, 2024 06:53

இன்னும் மதம், கோவில் என்று புஸ் வானத்தையே கொளுத்திப் போட்டுக்கிட்டிருந்தால் எப்படி


sridhar
ஜூலை 26, 2024 10:22

வேணும்னா கிறிஸ்துவம், சர்ச்சு என்று பேசவா - அற்ப காசுக்கு மதம் மாறி மதி கெட்டுப்போய் ….


Kalyanaraman Andhukuru.R.
ஜூலை 26, 2024 13:57

சர்ச் மசூதி என்று சொல்ல வேண்டும் அல்லவா?


மேலும் செய்திகள்







புதிய வீடியோ