உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகம் முழுதும் ஆவின் பால் பொருட்கள் கிடைக்கும்

தமிழகம் முழுதும் ஆவின் பால் பொருட்கள் கிடைக்கும்

சென்னை:“தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும், ஆவின் பால் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது,” என, பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.சென்னை மண்ணடியில், காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை உள்ளது. இங்கு ஆவின் பால் பொருட்கள் விற்பனை தொடர்பாக, அமைச்சர் மனோ தங்கராஜ், நேற்று ஆய்வு நடத்தினார். அதன்பின், அவர் அளித்த பேட்டி:தமிழகம் முழுதும், 45 கூட்டுறவு மொத்த பண்டகசாலைகள் மற்றும் கூட்டுறவு விற்பனை சங்கங்களுக்கு, ஆவின் பால் பொருட்கள் மொத்த விற்பனை உரிமம் வழங்கப்பட்டு உள்ளது. இதனால், பண்டக சாலைகள் மற்றும் சங்கங்களுக்கு வருவாய் கிடைக்கும்.முதல் டீலர் உரிமத்தை காஞ்சிபுரம் பண்டக சாலை பெற்றுள்ளது. இந்த பண்டகசாலையின் பல்பொருள் அங்காடிகள், 400 ரேஷன் கடைகளில், ஆவின் பால் பொருட்கள் விற்கப்படும்.காஞ்சிபுரம் பண்டக சாலையில், கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு, 36 லட்சம் ரூபாய்க்கு ஆவின் பால் பொருட்கள் விற்கப்பட்டன. இந்தாண்டு, 1 கோடி ரூபாய்க்கு விற்க ஆலோசிக்கப்பட்டது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் ஆவின் பால் பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி