உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அஜித்திற்கு வலை வீசும் பா.ஜ.,?

அஜித்திற்கு வலை வீசும் பா.ஜ.,?

சென்னை:தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, அக்கட்சியின் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர், நடிகர் அஜித்திற்கு நேற்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துஉள்ளனர். 'எளிய பின்புலத்தில் இருந்து வந்து, தன் திறமையால் திரையுலகில் உயர்ந்திருக்கும் நடிகர் அஜித்திற்கு, பிறந்த நாள் வாழ்த்துக்கள்' என, அண்ணாமலை கூறியுள்ளார்.'தமிழக இளைஞர் களின் நம்பிக்கை நாயகன். எந்த வெற்றி யையும் சாத்தியப்படுத்த முடியும் என்று நிரூபித்த அஜித்திற்கு, பிறந்த நாள் வாழ்த்துகள்' என்று, வானதி கூறியுள்ளார்.மிகப்பெரிய ரசிகர் வட்டாரத்தை பெற்றுள்ள அஜித் ஆதரவை பெறுவதற்கான முயற்சியாக இது இருக்கலாம் என, அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ