சென்னை:தமிழகத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களில் பெரும்பாலானோர், பா.ஜ., கூட்டணிக்கு ஓட்டளித்துள்ளனர். இதன் காரணமாக, தபால் ஓட்டு பதிவில், பா.ஜ., கூட்டணி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், தங்கள் கோரிக்கைகளை, தமிழக அரசு நிறைவேற்றாமல் உள்ளதால், அதிருப்தியில் உள்ளனர். இது தேர்தலில் எதிரொலித்துள்ளது. வழக்கமாக தபால் ஓட்டுகளில், தி.மு.க., அதிக வித்தியாசத்தை பெறும். இம்முறை தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மட்டுமின்றி, 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோரும், தபால் ஓட்டுகள் அளித்தனர். இதன் காரணமாக, 3 லட்சம் தபால் ஓட்டுகள் பதிவாகின.இதில் வழக்கத்திற்கு மாறாக, இம்முறை மற்ற கட்சிகள் கணிசமான ஓட்டுகளை பெற்றுள்ளன. தென் சென்னை, தேனி தொகுதிகளில், பா.ஜ., கூட்டணி தபால் ஓட்டுகளில் முன்னிலை பெற்றது.மொத்தம் 27 லோக்சபா தொகுதிகளில், அ.தி.மு.க., கூட்டணியை விட கூடுதல் ஓட்டுகள் பெற்று, தபால் ஓட்டில் பா.ஜ., கூட்டணி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. அரசு மீதுள்ள அதிருப்தி காரணமாக, பா.ஜ., கூட்டணிக்கு அதிகம் ஓட்டளித்துள்ளதையே இது காட்டுகிறது. பதிவான தபால் ஓட்டுகளில், தி.மு.க., கூட்டணி 1,11,150; பா.ஜ., கூட்டணி 62,707; அ.தி.மு.க., கூட்டணி 50,241; நாம் தமிழர் கட்சி 24,318 ஓட்டுகளை பெற்றுள்ளன. தமிழகத்தில் பா.ஜ., கூட்டணி அதிக அளவில் தபால் ஓட்டுகளை பெற்றிருப்பது, இதுவே முதல் முறை.
கட்சிகள் பெற்ற தபால் ஓட்டுகள் விபரம்:
தொகுதி - தி.மு.க., - பா.ஜ., - அ.தி.மு.க., - நாம் தமிழர்திருவள்ளூர் - 2,348 - 759 - 354 - 218வட சென்னை - 1,600 - 690 - 480 - 239தென் சென்னை - 1,321 - 1,454 - 383 - 151மத்திய சென்னை - 1,562 - 1,100 - 244 - 166ஸ்ரீபெரும்புதுார் - 2,940 - 927 - 1,033 - 302காஞ்சிபுரம் - 3,066 - 1,139 - 1,580 - 414அரக்கோணம் - 2,638 - 1,711 - 1,314 - 959வேலுார் - 2,257 - 2,034 - 718 - 577கிருஷ்ணகிரி - 1,752 - 1,266 - 1,097 - 823தர்மபுரி - 3,366 - 2,922 - 2,039 - 805திருவண்ணாமலை - 3,522 - 2,064 - 1,914 - 721ஆரணி - 3,016 - 2,033 - 1,683 - 759விழுப்புரம் - 2,803 - 1,862 - 1,827 - 476கள்ளக்குறிச்சி - 3,243 - 657 - 2,228 - 554சேலம் - 4,063 - 1,310 - 2,770 - 571நாமக்கல் - 4,341 - 1,113 - 3,566 - 682ஈரோடு - 3,490 - 592 - 2,022 - 464திருப்பூர் - 2,544 - 1,256 - 1,485 - 476நீலகிரி - 2,483 - 1,516 - 813 - 233கோவை - 2,772 - 2,524 - 887 - 270பொள்ளாச்சி - 2,635 - 1,409 - 1,105 - 234திண்டுக்கல் - 2,758 - 1,490 - 836 - 954கரூர் - 3,077 - 965 - 1,881 - 541திருச்சி - 3,336 - 1,674 - 1,186 - 706பெரம்பலுார் - 5,206 - 1,260 - 1,607 - 892கடலுார் - 4,652 - 2,872 - 1,450 - 561சிதம்பரம் - 3,233 - 2,379 - 2,028 - 473மயிலாடுதுறை - 1,925 - 667 - 1,193 - 366நாகப்பட்டினம் - 2,285 - 638 - 1,411 - 448 தஞ்சாவூர் - 3,423 - 1,026 - 490 - 610சிவகங்கை - 2,046 - 1,229 - 758 - 854மதுரை - 2,122 - 1,879 - 641 - 493தேனி - 2,383 - 2,759 - 716 - 1,339விருதுநகர் - 2,380 - 2,122 - 2,634 - 909ராமநாதபுரம் - 2,974 - 2,104 - 1,023 - 971துாத்துக்குடி - 2,850 - 700 - 584 - 926தென்காசி - 2,654 - 1,843 - 1,190 - 1,585திருநெல்வேலி - 2,803 - 2,044 - 605 - 768கன்னியாகுமரி - 5,981 -- 4,718 -- 466 -- 828