உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருமா மாநாட்டுக்கு பா.ம.க., வரவேற்பு

திருமா மாநாட்டுக்கு பா.ம.க., வரவேற்பு

நாமக்கல்: ''தமிழகத்தில் மதுவை ஒழிக்க வேண்டும் என்பதே எங்களது கொள்கை. மது ஒழிப்புக்கு யார் வேண்டுமானாலும் போராடலாம். அதை நாங்கள் வரவேற்கிறோம்,'' என, பா.ம.க., தலைவர் அன்புமணி கூறினார்.நாமக்கல்லில் அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் மதுவை ஒழிக்க வேண்டும் என்பதே எங்களுடைய கொள்கை. மது விற்பனை நடப்பதற்கு அ.தி.மு.க., - தி.மு.க., கட்சிகளே காரணம். மது ஒழிப்புக்கு யார் வேண்டுமானாலும் போராடலாம். அதை நாங்கள் வரவேற்கிறோம்.மோகனுார் அருகே வளையப்பட்டியில், விவசாய நிலங்களில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இதை விடுத்து, தரிசு நிலத்தில் சிப்காட் அமைக்க வேண்டும்.தமிழகத்தில், 57 ஆண்டுகால திராவிட ஆட்சியில், 42 லட்சம் ஏக்கர் விவசாய நிலம் அழிக்கப்பட்டுள்ளது. இது தொடர்ந்தால், நம் சந்ததியினரின் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் போகும். தரிசு நிலங்களில் தொழிற்பேட்டைகளை அமைப்பதை, பா.ம.க., வரவேற்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ