உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கனடாவிலும் காலை உணவுத் திட்டம் அறிமுகம்: திமுக பெருமிதம்

கனடாவிலும் காலை உணவுத் திட்டம் அறிமுகம்: திமுக பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'இந்தியாவில் மட்டுமில்லாமல் கனடாவிலும் காலை உணவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் தொலை நோக்கு பார்வைக்கு கிடைத்த வெற்றியாகும்' என திமுக தெரிவித்துள்ளது.கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எக்ஸ் சமூகவலைதளத்தில், “கனடா பள்ளி குழந்தைகளுக்கு தேசிய உணவுத் திட்டத்தினை அறிமுகம் செய்து வைக்கப் போகிறோம்” என பதிவிட்டு இருந்தார். இந்நிலையில், இது குறித்து திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் துவங்கப்பட்டுள்ள காலை உணவுத் திட்டம் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் நடைமுறைப்படுத்தப்படுவது முதல்வர் ஸ்டாலின் தொலைநோக்குப் பார்வைக்குக் கிடைத்துள்ள வெற்றி. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி மதுரையில் காலை உணவு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி துவக்க பள்ளிகளில் உள்ள குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் மாநிலம் முழுவதும் விரிவுப்படுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 42 )

Sampathkumar Sampath
ஏப் 03, 2024 12:37

ம் ஓட்டுங்க ஓட்டுங்க


jss
ஏப் 03, 2024 11:41

ஏன் சந்திரன் செவ்வாய் கிரைத்திலும் காலை உணவுத்திட்டத்துற்க்கு ஜப்பனின் துணை முதல்வர் ஆணையிட்டுள்ளார் என்றும் அறிவித்து விடுங்களேன். ஏமாறுவதற்க்கு தமிழன் என்றொரு இனம் இருக்கும்போது எதையும் சொல்லி நம்ப வைத்து விடாலாம். கூடவே சந்திரன் செவ்வாய் கிரகங்களில் காலை உணவு திட்த்தை கலைஞர் கருணாநிதி செய்வார் என்றும் அறிவித்து விடுங்கள். பொய் சொல்வதற்கு காசா பணமா?


அருண், சென்னை
ஏப் 03, 2024 05:05

ஆஸ்திரலியாவையும், சிங்கப்பூரையும் மறந்துடீங்களே!


Sivakuamar Panneerselvam
ஏப் 03, 2024 00:41

முடியலடா சாமி. இவர்களை குற்றம் சொல்லி பயனில்லை. எல்லாம் நம் மக்களின் இலவசத்தின் மீது கொண்ட தீரா காதல் தான் காரணம். மக்கள் திருந்தினால் மட்டுமே இவர்களை ஒழிக்க முடியும். நாடும் நம் பிள்ளைகளின் எதிர்காலமும் வளப்படும். இறைவா எம் மக்கள் சிந்தனையை நல்வழிப் படுத்துவாயாக.


Mannathil Muralidharan
ஏப் 02, 2024 23:00

வெகு காலமாக கனடாவில் காலை உணவு திட்டம் அமலில் ulladhu


Kumar Kumzi
ஏப் 02, 2024 21:54

நம்பர் வன் கோமாளின்னு உலக மக்களால் அன்போடு அழைக்கப்படுவார் ஹீஹீஹீ


Cheran Elumalai
ஏப் 02, 2024 21:19

அந்த காலை உணவை உங்கள் வீட்டு பிள்ளைகள் உண்பார்களா?


Kumarave
ஏப் 02, 2024 21:12

ஸ்டிக்கர் ஸ்டாலின்


Venkataraman
ஏப் 02, 2024 20:52

ஆப்பிரிக்காவிலும் இலவச காலை உணவு திட்டம் நிறைவேற்றுவார்கள் ஆனால் அது விளம்பரத்துக்காகவோ மக்களிடம் ஓட்டு வாங்குவதற்காக அல்ல திமுக மட்டும்தான் ஓட்டுக்காகவும் விளம்பரத்துக்காகவும் எதையும் செய்யும்


Ramesh Sargam
ஏப் 02, 2024 20:45

இன்றளவில் மத்திய அரசு திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி பெருமை தேடியது இந்த திருட்டு திமுக அரசு இப்பொழுது ஒருபடி மேலே போய் வெளிநாட்டு திட்டங்களுக்கும் ஸ்டிக்கர் ஒடி பெருமை தேடிக்கொள்கிறது இதெல்லாம் ஒரு பொழப்பா முதல்வரே தமிழர்கள் மானத்தை இப்படி வாங்குகிறீர்கள்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை