உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காவிரி விவகாரத்தில் சட்டப்போராட்டம்: அனைத்து கட்சி கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்

காவிரி விவகாரத்தில் சட்டப்போராட்டம்: அனைத்து கட்சி கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்

சென்னை: காவிரி நீர் விவகாரம் தொடர்பாக முடிவெடுக்க, தமிழக சட்டசபை அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. தி.மு.க., காங்கிரஸ், அ.தி.மு.க., பா.ம.க, ம.தி.மு.க, பா.ஜ., இந்திய கம்யூ., மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் பங்கேற்றனர். காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை நாடி சட்டப்போராட்டம் நடத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.காவிரி நீரை பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து, அமைச்சர் துரைமுருகன் தலைமையில், இன்று(ஜூலை 16) தமிழக சட்டசபை கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. சென்னை தலைமை செயலகத்தில், காலை 11:00 மணிக்கு கூட்டம் கூடியது. கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் தி.மு.க., எம்.பி. வில்சன், திமுக அமைப்பு பொதுச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, வி.சி.க., தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பா.ஜ., சார்பில் கருப்பு முருகானந்தம், கரு.நாகராஜன் பங்கேற்றனர்.

சட்டப்போராட்டம்

கூட்டத்தில், ஸ்டாலின் பேசியதாவது: கர்நாடக அரசின் செயல் கண்டித்தக்கது. காவிரியில் தமிழகத்திற்குரிய பங்கு நீரை கர்நாடகா அரசு வழங்க மறுப்பதை ஏற்க முடியாது. காவிரியில் உரிய நீரை திறக்காததால் தமிழக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு உச்சநீதிமன்றத்தை நாடி தமிழகத்திற்கு தேவையான தண்ணீரைப் பெற்றோம்.

விவசாயிகளின் உரிமை

பருவமழை சாதமகமாக இருக்கும் நிலையிலும் கர்நாடகா இப்படி செய்வதை ஏற்க முடியாது. காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை நாடி சட்டப்போராட்டம் நடத்தப்படும். தண்ணீர் திறக்க கோரி, கர்நாடகா அரசுக்கு ஆணையிட காவிரி மேலாண்மை ஆணையத்தை இந்த கூட்டம் வலியுறுத்துகிறது. காவிரி டெல்டா விவசாயிகளின் உரிமைகளை இந்த அரசு நிலை நாட்டும் என உறுதியளிக்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Arul Narayanan
ஜூலை 17, 2024 14:50

போன வருட பாக்கிக்காக வழக்கு போட்டிருந்தால் இந்த வருடமாவது கிடைத்திருக்கும்.


nv
ஜூலை 16, 2024 13:45

நம்மூரில் சட்ட போராட்டம் என்பது பல தலைமுறைகளுக்கு இழுத்து செல்லும்.. அதானால் தான் நம்ம முதலவர் இதை கையில் எடுத்துள்ளார்..


SRIRAMA ANU
ஜூலை 16, 2024 13:31

பிரதமர் நாட்டின் முதல் மகா சக்தி வாய்ந்த நிர்வாகி அவர் நினைத்தால் உடனே காவிரியை திறக்க முடியும் திறப்பாரா? தமிழ் மக்களுக்கு நல்லது செய்வாரா?


Narayanan
ஜூலை 16, 2024 14:59

நீர்வளத்துறை ஆணையம் தனியாக உருவாக்கப்பட்டு சுயகட்டுப்பாட்டில் இயங்க கட்டளை . ஆணையத்திற்கு மதிப்பளிப்பதில்லை கர்நாடக அரசு . அடுத்த கதவு நீதிமன்றம் . இப்போதெல்லாம் எந்த அரசியல்வாதிகளும் நீதிமன்றத்தையும் மதிப்பதில்லை .


வாய்மையே வெல்லும்
ஜூலை 16, 2024 16:19

உங்களோட இண்டிக்கூட்டணி வேண்டப்பட்ட ஆளு கடாக்கட் கமறுக்கட்டு புகழ் ரவுல் அய்யாகிட்ட பேசி கர்நாடக காங்கிரஸ் ஆட்சிக்கு அழுத்தம் கொடுக்கலாமே.


lana
ஜூலை 16, 2024 16:31

எதிர் கட்சி தலைவர் உடன் பேச மாட்டாரா.


ஆரூர் ரங்
ஜூலை 16, 2024 13:15

கருணாநிதி கர்நாடக அரசு எத்தனை அணைகளை வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளட்டும் என சட்டசபையில் அறிவித்தார். அதனால் ஏற்பட்ட காவிரிப் பிரச்சினைக்கு மற்ற கட்சிகளின் மீது பழி போட வசதியாக சர்வ கட்சிக் கூட்டம். தண்ணீர் வராமலடித்து மணலள்ளிப் பிழைக்கும் திருட்டுக் கும்பல் திராவிஷம்.


ஆரூர் ரங்
ஜூலை 16, 2024 13:10

தானாக தீர்த்து வைத்தாலும் மத்திய அரசே தீர்த்து வைத்தாலும் தவறாமல் தம்முடைய ஸ்டிக்கரை மட்டும் ஒட்டி வைப்பர். இரண்டுமே ஆகாது என்ற நிலைகளில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி பஜ்ஜி போண்டா டீ அளித்து பிரச்சினையை கிடப்பில் போடுவர். இதில் தந்தையும் மகனும்( பேரனும் கூட)சாமர்த்தியசாலிகள்.தவறியும் காங்கிரஸ் தலைமையுடன் பேச மாட்டார்கள். ஏமாற்றாதே.ஏமாறாதே.


கூமூட்டை
ஜூலை 16, 2024 13:01

இதற்காக நீங்கள் பார்க்க வேண்டிய படம் குரு சோவின் துக்ளக் படம் தயவுசெய்து மீண்டும் எல்லாம் மக்களும் பார்க்க வேண்டும்


Narayanan
ஜூலை 16, 2024 12:23

ஸ்டாலின் கர்நாடக முதல்வருடனும் , ராகுல் காந்தியுடனும் ,அம்மையார் சோனியாவுடனும் நெருக்கம் உள்ளவர் . அவர்களிடம் போய் கேட்டு காவேரி நீரை கொண்டுவந்திருக்கலாமே. அதைவிடுத்து இந்த கூட்டம் ஒன்றும் நிலைநிறுத்தபோவதில்லை .


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ