உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவை, பெங்களூரு சேவையில் இன்று மாற்றம்

கோவை, பெங்களூரு சேவையில் இன்று மாற்றம்

சென்னை சென்ட்ரல் - கோவை, பெங்களூரு உள்ளிட்ட விரைவு ரயில்களின் சேவையில், இன்று மாற்றம் செய்யப்படுகிறது.தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பு:காட்பாடி ரயில்வே யார்டில் இன்று மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளதால், சில ரயில்களின் சேவையில், இன்று மாற்றம் செய்யப்படுகிறது ↓கோவை - சென்னை சென்ட்ரல் காலை 6:20 மணி 'இன்டர்சிட்டி' விரைவு ரயில், இன்று காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும் ↓கர்நாடகா மாநிலம் மைசூரு - சென்னை சென்ட்ரல் அதிகாலை 5:00 மணி விரைவு ரயில், இன்று காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும் ↓சென்னை சென்ட்ரல் - கோவை மதியம் 2:35 மணி இன்டர்சிட்டி விரைவு ரயில், காட்பாடியில் இருந்து இன்று மாலை 4:15 மணிக்கு இயக்கப்படும்  ↓சென்னை சென்ட்ரல் - கர்நாடகா மாநிலம் கே.எஸ்.ஆர்., பெங்களூரு, மாலை 3:30 மணி லால்பாக் விரைவு ரயில், காட்பாடியில் இருந்து இன்று மாலை 5:30 மணிக்கு இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை