உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழர்களே கீழடிக்கு வருக: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

தமிழர்களே கீழடிக்கு வருக: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'உலகெங்கும் வாழும் தமிழர்களே, கீழடிக்கு வருக நம் வரலாற்றை பருக' என, முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.அமைச்சர் தங்கம் தென்னரசு, தன் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:உலகின் முன்னோடி இனமான பழந்தமிழர் நாகரிகத்தின் தொட்டிலாய் விளங்கும் சிவகங்கை மாவட்டம் கீழடியில், முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலில், 18.8 கோடி ரூபாய் செலவில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு, கடந்த ஆண்டு திறக்கப்பட்டது.பழந்தமிழ் சமூகத்தின் முற்போக்கு சிந்தனைகள் பொருந்திய, 11,000க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள், கீழடி அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள், இந்த அருங்காட்சியகத்தை உள்ளம் குளிரக் கண்டுகளிக்கின்றனர். இந்நிலையில், மத்திய அரசின் சுற்றுலாத்துறை சார்பில், சுற்றுலா தினத்தில் வழங்கப்படும் சிறந்த பாரம்பரிய சுற்றுலா தலமாக கீழடி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது திராவிட மாடல் அரசுக்கு பெருமை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இப்பதிவை, முதல்வர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து, 'உலகெங்கும் வாழும் தமிழர்களே, கீழடிக்கு வருக நம் வரலாற்றை பருக' என, அழைப்பு விடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

அப்பாவி
செப் 29, 2024 20:56

ஏற்கனவே பிற இடங்கள் கெடந்து நாறுது.


Barakat Ali
செப் 29, 2024 14:08

தமிழர்களின் மதம் சனாதனம் இல்லை என்று காட்டுவதும் கீழடியின் நோக்கம் .........


Ramachandran Saragothaman
செப் 29, 2024 09:56

what is the relationship between keezhadi and karuanidhi kingdom?


ஆரூர் ரங்
செப் 29, 2024 07:40

முதல்வரே முதலில் வேங்கைவயலுக்கு செல்க.


N thirumalsi
செப் 29, 2024 07:01

கீழடி இருக்கட்டும் திராவிட குவாட்டர்பாட்டில் காடு முதல் ஆறு குளம் விவசாய நிலம் எங்கும் எதிலும் விவசாய்கள் இனிமேல்.களனி இல்லாமல் விவசாயம் செய்ய முடியாது நதி ஆறுகளில் குவாட்டர்போட்டில 2000 வருடம் ஆனபின்பூ ட்ராவிடவலாறு தோண்டியெடுக்கும் போது என்ன கிடைக்கும்


நயன்
செப் 29, 2024 06:46

தெலுங்கர்கள் செல்ல வேண்டாம் என மறைமுகமாக கூறுகிறாரா??


Kasimani Baskaran
செப் 29, 2024 06:38

செல்வச்செழிப்பில் கிரேக்கத்துக்கே சவால் விட்டது பண்டைய தமிழன் நாகரீகம். கடலுக்குள் பொக்கிஷங்கள் இருக்கும் பொழுது இதுகள் குப்பையை நோண்டி பெருமைப்படுவது சுத்தமான கோமாளித்தனம்.


Kumar Kumzi
செப் 29, 2024 06:32

இது தான்யா ஓங்கோல் தெலுங்கன் குசும்பு பக்கத்தில் டாஸ்மாக் கடை திறந்தால் தானே டுமீலன் வருவான்


திருட்டு திராவிடன்
செப் 29, 2024 06:24

உலக மகா அதி புத்திசாலி அழைக்கிறார் மக்களே வாருங்கள் வாருங்கள் வாருங்கள்.


G Mahalingam
செப் 29, 2024 06:05

இப்போது பல கோவில்கள் இடிந்து வருகிறது. அதை புணரமைக்க முடியவில்லை ‌. இதுவே 50 ஆண்டு கழித்து கீழடி 2 ஆகி விடும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை