உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் அமளியான இந்தியாவாக மாற்றிவிடுவர் தேனி பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் அமளியான இந்தியாவாக மாற்றிவிடுவர் தேனி பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

தேனி:பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் அமைதியான இந்தியா, அமளியான இந்தியாவாக மாற்றிவிடுவர்' என, தேனி பிரசார பொதுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.தேனி, திண்டுக்கல் தொகுதிகளின் இண்டியா கூட்டணி வேட்பாளர்களான தி.மு.க., தங்க தமிழ்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூ., வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோரை ஆதரித்து தேனி லட்சுமிபுரம் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:தங்கதமிழ்செல்வன் இந்த மண்ணின் மைந்தர், தி.மு.க., கொள்கை பரப்புச் செயலாளர், மாவட்ட செயலாளர், மிக நீண்ட அரசியல்அனுபவம் கொண்டவர். இவருக்கு உதயசூரியன் சின்னத்திலும், திண்டுக்கல் வேட்பாளராக சச்சிதானந்ததிற்கு அரிவாள் - சுத்தியல் - நட்சத்திரம் சின்னத்தில் ஓட்டளித்து வெற்றி பெற வைக்க வேண்டும்.நீங்கள் அளிக்கும் ஓட்டால் இந்தியாவின் அடுத்த பிரதமராக ஒரு ஜனநாயகவாதி வர முடியும். தமிழ்நாட்டை மதிக்கும் ஒருவர் பிரதமர் ஆவதற்கான வாய்ப்பு கிடைக்கும். பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் அமைதியான இந்தியா, அமளியான இந்தியாவாக மாற்றிவிடும். ஒரு தாய் மக்களாக வாழும் நம்முடைய மக்கள் மனதில் வேறுபாட்டின் விதைகளைத் துாவி இந்தியாவையே நாசம் செய்து விடுவார்கள். மற்றொரு முறை மோடி ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் ஜனநாயகம் இருக்காது. தேர்தல் என்பதே ஜனநாயகப்பூர்வமாக நடக்காது. மாநில அரசுகளுக்கு எந்த அதிகாரமும் இருக்காது. ஒரே மொழி ஒரே மதம் ஒரே பண்பாடு ஒரே உடை, ஒரே உணவு என்று ஒற்றை சர்வாதிகார நாடாக மாற்றி விடுவார்கள். சமூக நீதியை குழிதோண்டி புதைத்துவிடுவார்கள்.வெளிநாடுகளுக்கு டூர் சென்ற பிரதமர் மோடி தேர்தல் வந்துவிட்டதால் உள்நாட்டிற்குள்டூர் அடிக்கிறார். அவர் ஏதோ ஷோ காட்ட வருகிறார் என்று நான் சொல்லவில்லை. அவரே ரோடு ஷோ காட்டுகிறேன் என்றுதான் சொல்லி இருக்கிறார். சென்னை மெட்ரோ திட்டத்தை விரிவாக்கம் செய்யப் போகிறாராம். அந்த திட்டத்திற்கு தடையாக இருப்பதே நீங்கள்தானே. சென்னை 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்காததால்தான் நிதி கிடைக்கவில்லை. அதனால்தான் திட்டப்பணிகள் காலதாமதமாகிறது. கடந்த 2020ல் மத்திய உள்துறை அமைச்சர் இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். ஆனால் அனுமதி கொடுக்கவில்லை. மதுரை எய்ம்ஸ் போன்று, சென்னை மெட்ரோவும் அடிக்கல்லோடு நிற்க கூடாது என்று இப்போது மாநில அரசின் நிதியில் இருந்து மெட்ரோ பணிகள் நடந்து வருகின்றன.

மக்களை பிளவுபடுத்திபேசுவதா

சென்னை ஷோ காட்டிய மோடி, காலையில் வேலுார் சென்றிருக்கிறார். அங்கு தமிழ்நாட்டை வளர்க்கப் போகிறேன் என ஹிந்தி மொழியில் பேசி சபதம் ஏற்கிறார். ஊழலுக்கு பல்கலை கட்டி அதற்கு வேந்தராக நியமிக்க வேண்டும் என்றால் அதற்கு பொருத்தமானவர் பிரதமர் மோடி. பண்பாட்டிற்கு தி.மு.க., எதிராக இருக்கிறது என பேசுகிறார். 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' இதுதான் தமிழர் பண்பாடு. யாதும் ஊரே யாவரும் கேளிர் இதுதான் தமிழர் பண்பாடு. பிரிவினைவாத அரசியல் செய்வது யார். ஜாதியாலும் மதத்தாலும் மக்களை பிளவுபடுத்தும் நீங்கள் தி.மு.க.,வை குற்றம் சாட்டலாமா. சமூக நீதி பேசும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை முஸ்லீம் லீக் தேர்தல் அறிக்கையாக உள்ளது என கேலி பேசுவது யார். பத்தாண்டுகள் பிரதமராக இருந்து சாதனைகளை மக்களிடம் கூறாமல் மக்களை பிளவு படுத்தி பேசுகிறோம் என வெட்கப்பட வேண்டும். அவருக்கு நாம் சொல்ல வேண்டியது ஒரே முழக்கத்தில் வேண்டாம் மோடி. தெற்கில் இருந்து வரும் இந்தக்குரல், இந்தியா முழுமைக்கும் கேட்கட்டும். இண்டியா கூட்டணி அமைந்தால் இந்தியா வளம் பெருகும், தமிழ்நாடு வளம் பெரும். அ.தி.மு.க..,வை வெளியில் இருந்து அழிக்க தேவையில்லை:கடந்த முறை தேனி தவிர எல்லா தொகுதியிலும் வென்றோம். அந்த தொகுதியான தேனியில் இம்முறை தமிழ்நாட்டிலேயே அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெல்ல வேண்டும். பழனிசாமி காலையில் பத்திரிகை படிக்க வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தல் என லோக்சபா தேர்தலில் காத்திருந்த பழனிசாமி, இலவு காத்த கிளியாக காத்திருந்த அவர் அரசியல் அமாவாசையாக உள்ளார். அடுத்து வரும் சட்டசபை தேர்தலிலும் தி.மு.க.,தான் ஆட்சிக்கு வரும். சவடால் விடும் அவரது கட்சியை வெளியில் இருந்து யாரும் அழிக்க தேவையில்லை. பழனி சாமியும், பன்னீர்செல்வம், தினகரனும் அதை போட்டிபோட்டு செய்து கொண்டிருக்கின்றனர். அதனால் பா.ஜ.வின் தொங்கு சதைகளாக உள்ள பழனிசாமி, பன்னீர்செல்வம், தினகரன், பா.ம.க., ஆகிய அடிமை கூட்டத்திற்கும் திண்டுக்கல், தேனி மக்கள் பாடம் புகட்ட வேண்டும். இவ்வாறு பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Gopalakrishnan Govindarajan
ஏப் 11, 2024 16:16

He accepts that peace is prevailing thought in India with no communal clash etc for the past 10 years. How it will change if Modi is re elected as PM.


Narayanan
ஏப் 11, 2024 14:47

திமுக ஆட்சி அகற்றப்படும் அதனால் இவர்களின் ரவுடிகள் கலவரம் செய்வார்களோ அதனால் அமளி ஆகிவிடும் என்று சொல்கிறாரா ஸ்டாலின் ?


sureshpramanathan
ஏப் 11, 2024 14:02

Thiruttu DMK only


ram
ஏப் 11, 2024 13:11

எப்படி எப்படிஎல்லாம் கம்பி கட்டுறான்னுக


P.Sekaran
ஏப் 11, 2024 11:03

பத்து ஆண்டுகளில் அமைதியாக இருந்ததை அவரே ஒப்புக்கொண்டு விட்டார் பிறகு எப்படி அமளியான இந்தியாவாக உருவாகும் கேளிக்குறிய பேச்சாகும் ஏதாவது பேசவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார் பயத்தில் உலறுகிரார் என்றே தோன்றுகிறது


N DHANDAPANI
ஏப் 11, 2024 10:28

பாஜ ஏற்கனவே பத்து வருடம் இந்தியாவை மத்தியில் ஆள்வதாலும் பத்துக்கு மேற்பட்ட இந்திய மாநிலங்களை ஆள்வதாலும் நமது முதல்வர் சொல்வது இண்டிய கூட்டணி பற்றி இருக்கும் இந்திய தேசமாக இருக்க வாய்ப்பில்லை


Kasimani Baskaran
ஏப் 11, 2024 07:09

திமுகவும் காங்கிரசும் அவரவர் பங்கை செய்து வம்பு செய்வார்கள்


Duruvesan
ஏப் 11, 2024 06:30

போதை ஜாபர்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை