உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கஞ்சா விற்பனை செய்த தலைமை செயலக பெண் ஊழியர், கணவர் கைது

கஞ்சா விற்பனை செய்த தலைமை செயலக பெண் ஊழியர், கணவர் கைது

சென்னை : தேனியில் இருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சாவை, சென்னையில் பொட்டலமாக தயாரித்து விற்ற, தலைமை செயலக பெண் ஊழியரும், அவரது கணவரும் கைது செய்யப்பட்டனர். கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை ஓட்டேரியைச் சேர்ந்தவர் அருள், 38. கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் முக்கிய புள்ளி. அவரின் மனைவி கோட்டீஸ்வரி, 35. தலைமை செயலகத்தில், பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.சமீபத்தில், கஞ்சா விற்பனை தொடர்பாக அருள் கைது செய்யப்பட்டார். அவர், மனைவி, சகோதரர்களுடன் சேர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தொடர்பாக, போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலம்:தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த பிரபு, 12 கிலோ கஞ்சாவை கடத்தி வந்து, புரசைவாக்கம் தானா தெருவில் காத்திருந்தார். அதை அவரிடம், 1.20 லட்சம் ரூபாய்க்கு வாங்கினேன். இதை நானும், என் மனைவி கோட்டீஸ்வரி, சகோதரர்கள் பழனி, கணபதி ஆகியோர் பொட்டலமாக தயாரித்து, 3 லட்சம் ரூபாய்க்கு விற்று விடுவோம்.கஞ்சாவை மொத்தமாக விற்க மாட்டோம். முதலில், 2 கிலோவை பொட்டலம் போட்டு விற்று விடுவோம். அதற்காக, இரு சக்கர வாகனங்களை பயன்படுத்துவோம். என்னிடம் கஞ்சா வாங்கி விற்க, சென்னையின் பல இடங்களில் கூட்டாளிகள் உள்ளனர்.இவ்வாறு, அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.இதையடுத்து, கோட்டீஸ்வரியும் கைது செய்யப்பட்டார். அவர், எழும்பூர் நீதிமன்றத்தில், ஜாமினில் விடுவிக்கப்பட்டார். அருளை போலீசார் கைது செய்த போது, 17.29 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர். அவரின் கூட்டாளிகளை, சென்னை வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் அஸ்ரா கார்க் தலைமையிலான தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Lion Drsekar
ஜூன் 26, 2024 17:22

ஒரு குறிப்பிட்ட ஊழியர்கள் யாராலே அவர்கள் பணிபுரியும் தொடர்புடைய வியாபாரங்களை குடும்பத்தார்கள் பெயர்களில் பங்குதாரர்களாக தொழில் செய்வது வழக்கம் . மிக உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் வெளிநாட்டுக்கு தங்கள் வாரிசுகளை அனுப்பி படிக்க வைத்து .. இவர்கள் ஓய்வு பெற்றதும் ஒன்று அங்கு இவர்கள் பணிபுரிந்த தொழில் பங்கேற்ப்பார்கள் அல்லது பிள்ளைகளின் பெயர்களில் தொழில் செய்வார்கள் . இதுதான் இன்றுவரை நடைபெற்று வருகிறது . நான் லண்டனில் இருக்கும்போது நேரில் கண்டதை இங்கு பதிவு செய்கிறேன் . இதுதான் உண்மை இதுதான் சத்தியம் . அரசு ஊழியர்கள் எல்லோருமே குறை சொல்ல முடியாது . நல்லவர்களும் மக்களுக்காக உழைக்கிறர்கள் . அவர்கள் குடும்பம் இங்கேயே செக்கு இழுக்கும் மாடுபோல் , சுதந்திர போராட்ட வீரர்களின் குடும்பம் போல் இருக்கும் . வாழ்க ஜனநாயகம் . வந்தே மாதரம்


theruvasagan
ஜூன் 26, 2024 15:55

அயலக அணித் தலைவர் மாதிரி செயலக அணித் தலைவர் கூட இருக்காங்க போல. மாடல் ஆட்சின்னா சும்மாவா.


SUBRAMANIAN P
ஜூன் 26, 2024 13:46

படிச்சிட்டு அதுக்கேத்த வேலை கிடைக்காம கஷ்டப்படுறவனும் அன்றாடம் கஷ்டப்பட்டு பணம் சம்பாதிக்கும் மக்களுக்கும் மத்தியில் இதுபோல பேராசை பிசாசுகள் பணத்துக்காக அடுத்தவங்க குடியைக்கெடுக்கும் ஜென்மங்களையும் பாரபட்சம் பாக்காம பிடிச்சு ஜெயில்ல போட்டு பட்டினி போட்டாதான் புத்தி வரும். ஆனா ஓட்டுவங்கிக்காக அரசியல் செய்யும் இந்த கட்சிகளிடம் இதை எதிர்பார்க்கமுடியாது.


Muralidharan S
ஜூன் 26, 2024 13:03

தலைமை செயலக ஊழியருக்கு அரசாங்க சம்பளம், கிம்பளம் எல்லாம் இப்ப பத்தறது இல்லை போல இருக்கு.. கஞ்சா விற்பனையில் இறங்கிவிட்டனர். ரவுடிகள், சமூக விரோதிகள் செய்யும் தொழில்களை எல்லாம் இப்பொழுது அரசாங்க உத்யோகத்தில் இருப்பவர்களும் செய்வது, சாதாரண மக்களுக்கு சாதாரண ஒரு நிம்மதியான வாழ்க்கையில் மனநிறைவு இல்லை என்பதையே காட்டுகிறது. அதற்கும் மேலே என்னமோ தேவைப்படுகிறது.


Ms Mahadevan Mahadevan
ஜூன் 26, 2024 12:14

தனி மனித தவருக்கும் குற்றங்களுக்கு அரசு எப்படி பொறுப்பாகும்? தனி மனித ஒழுக்கம் அவசியம். அரசு அலுவகத்தில் காரியம் உடனே ஆக நாம் தானே எவ்வளவு ஆனாலும் பிரவாய்ல்லை என்று ஆரம்பிப்பதே நாம்தான் . எனவே தனிமனித ஒழுக்கம் அவசியம்


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 26, 2024 22:49

பாஜக ன்னா இதே வாயி வேறமாதிரி பேசுமே ????


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 26, 2024 11:52

இந்தம்மா வேலை செய்தது யாருக்காக?? சனாதனத்தைப் பழித்துப் பேசிய நிதிக்காகவா ????


Svs Yaadum oore
ஜூன் 26, 2024 10:19

தலைமை செயலக ஊழியர் கஞ்சாவா ??....அரசு ஊழியர் எல்லாம் கஞ்சா வித்து மக்களுக்கு சமூக நீதி திராவிட மாடலில் அரும்பணி .....இதுதான் மத சார்பின்மை ஆட்சி ....


Varadarajan Nagarajan
ஜூன் 26, 2024 10:12

போதைப்பொருள் வைத்திருந்ததாக யூ டியூபர் சவுக்கு சங்கருக்கு ஜாமீனில் வெளிவரமுடியாதபடி காவல். ஆனால் போதைப்பொருள் விற்பவருக்கு உடனடி ஜாமீன். லாஜிக்கே புரியவில்லையே. எதிர்பாராத விபத்தில் இறந்தால் நிவாரணம் 1 லட்சம் ஆனால் கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் 10 லட்சம். அதுபோலத்தான் இதுவுமா?


Ganapathy Subramanian
ஜூன் 26, 2024 10:06

கஞ்சா விற்றால் ஜாமீனில் வரமுடியாத குற்றம் என்கிறார்கள். பழிவாங்க போலீசார் போடும் கேஸ் கஞ்சா கேஸ் என்பார்கள். சவுக்கு சங்கருக்கும் அதனால்தான் கஞ்சா கேஸ் கிடைத்தது. இந்த பெண்மணிக்கு உடனே ஜாமீனா? கழகக்கண்மணியாக இருப்பாரோ?


SIVA
ஜூன் 26, 2024 10:04

போதை ஒழிப்பு உறுதி மொழி எடுத்தது எல்லாம் பொய்யா கோபால் ......


மேலும் செய்திகள்









புதிய வீடியோ