உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மென்பொருள் மாற்றத்தால் கூட்டுறவு வங்கி பணி பாதிப்பு

மென்பொருள் மாற்றத்தால் கூட்டுறவு வங்கி பணி பாதிப்பு

சென்னை:தமிழகத்தில் உள்ள 128 நகர கூட்டுறவு வங்கிகளில், உரிய திட்டமிடல் இல்லாமல் திடீரென புதிய மென்பொருள் அமலுக்கு கொண்டு வரப்பட்டதால், வங்கி பணிகள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தமிழகத்தில் 120 நகர கூட்டுறவு வங்கிகளும், எட்டு பணியாளர் கூட்டுறவு வங்கிகளும் உள்ளன. இவற்றில் கடந்த மாதம் வரை, 'இன்ப்ராசாப்ட் டெக்னாலஜிஸ்' என்ற நிறுவனத்தின் மென்பொருள் பயன்படுத்தப்பட்டது. இம்மாதம் முதல், 'வி சாப்ட்' என்ற நிறுவனத்தின் மென்பொருள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.உரிய திட்டமிடல் இல்லாமல், ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்காமல், புதிய மென்பொருளை உடனடியாக அமலுக்கு கொண்டு வந்ததால், வங்கி பணிகள் பாதிக்கப்பட்டுஉள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இது தொடர்பாக, தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனம், முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:புதிய மென்பொருளில் உள்ள குறைகள் முழுமையாக களையப்பட்ட பின், பழைய மென்பொருள் பயன்பாட்டை நிறுத்தியிருக்க வேண்டும். அதை செய்யாததால், பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. புதிய மென்பொருளை பயன்படுத்தி, வாடிக்கையாளர் சேவைகளை வழங்க, வங்கி பணியாளர்களுக்கு தகுந்த பயிற்சி வழங்கப்படவில்லை. இதற்கான தனி இணையதள இணைப்பு, 'வி சாப்ட்' நிறுவனத்தால் வழங்கப்படவில்லை. பொதுமக்கள் பயன்படுத்தும் இணையதள இணைப்பிலேயே வங்கிகள் பணிபுரிந்து வருவதால், வங்கியின் கணக்குகள் முடக்கப்படும் அபாயம் உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்