உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விருத்தாசலத்தில் கலப்பட டீ துாள் பறிமுதல்

விருத்தாசலத்தில் கலப்பட டீ துாள் பறிமுதல்

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் 33 கிலோ கலப்பட டீ துாளை போலீசார் பறிமுதல் செய்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். விருத்தாசலத்தில் கலப்பட டீ துாள் விற்பதாக கிடைத்த தகவலின் பேரில் திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர் ராஜசேகர் மற்றும் போலீஸ்காரர் மணிகண்டன் ஆகியோர் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.அதில், பஸ் நிலையம் அருகே உள்ள மளிகை கடையில் கலப்பட டீ துாள் விற்பனை செய்ததை கண்டுபிடித்து, 33 கிலோ டீ துாளை பறிமுதல் செய்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சுந்தரமூர்த்தி கூறுகையில், பறிமுதல் செய்யப்பட்ட டீ துாள், தஞ்சாவூரில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு, கலப்பட துாள் என உறுதி செய்யப்பட்டால், கடைக்கு 'சீல்' வைத்து அபராதம் விதிக்கப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Mani . V
ஜூலை 14, 2024 03:50

கள்ளச் சாராயம், கலப்படத் டீத்தூள்,......... என்ன கருமாந்திரம் நடந்தாலும், தேர்தல் சமயத்தில் விலையே மதிக்க முடியாத வாக்குக்கு பிச்சை ஸாரி அன்பளிப்பு கொடுத்தால் நாங்கள் ஊழல் ஆட்சியினர் என்றும் பாராமல் குத்து, குத்துன்னு குத்தி அவர்களை வெற்றி பெறச் செய்யும் சொரணையற்றவர்கள் நாங்கள்.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை