உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வீடுகளில் சூரியசக்தி மின் நிலையம் வாரிய ஒப்புதல் விவகாரத்தில் குழப்பம்

வீடுகளில் சூரியசக்தி மின் நிலையம் வாரிய ஒப்புதல் விவகாரத்தில் குழப்பம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைக்க, 3 கிலோ வாட் வரை சாத்தியக்கூறு தொழில்நுட்ப ஒப்புதல் பெற தேவையில்லை' என, மின் வாரியம் தெரிவித்தது. இதை, 10 கிலோ வாட்டாக அதிகரித்து, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சமீபத்தில் உத்தரவிட்டது. இது தொடர்பாக, மின் வாரியம் அதிகாரப்பூர்வ தகவலை தெரிவிக்காததால், குழப்பம் ஏற்பட்டு உள்ளது.வீடு உள்ளிட்ட கட்டடங்களில், பல்வேறு திறனில் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைக்க, மின் வாரியத்திடம் ஒப்புதல் பெற வேண்டும். இதற்கு அதன் இணையதளத்தில் விண்ணப்பிக்கும் போது, சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்த பின் ஒப்புதல் தரப்படும்.புதுப்பிக்கத்தக்க மின் பயன்பாட்டை ஊக்குவிக்க, தாழ்வழுத்த பிரிவில், 3 கிலோ வாட் வரை சூரியசக்தி மின் நிலையம் அமைக்க ஒப்புதல் பெற தேவையில்லை என, கடந்த ஜனவரியில் மின் வாரியம் உத்தரவிட்டது. மத்திய அரசு, 10 கிலோ வாட் வரை விலக்கு அளிக்குமாறு, மாநில மின்சார ஒழுங்கு முறை ஆணையங்களுக்கு உத்தரவிட்டது. அதை பின்பற்றி, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையமும், மின் நிலையம் அமைக்க, 10 கிலோ வாட் வரை விலக்கு அளித்து, கடந்த மாதம் உத்தரவிட்டது. இது, இன்னும் அதிகாரப்பூர்வாக அறிவிக்கப்படவில்லை. அந்த அளவுக்கு விலக்கு அளிக்கப்படாமல் இருப்பதுடன், ஒப்புதல் அளிக்கவும் தாமதம் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.இதுகுறித்து, சூரியசக்தி மின் நிலைய உரிமையாளர் ஒருவர் கூறியதாவது:வீடுகளில் சராசரியாக, 5 - 6 கிலோ வாட் திறனில் மின் நிலையம் அமைக்கப்படுகிறது. இருப்பினும், சாத்தியக்கூறு ஒப்புதல் அளிக்க தாமதம் செய்யப்படுகிறது. 10 கிலோ வாட் வரை விலக்கு அளிக்க ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.ஆனால், 3 கிலோ வாட் வரை தான் விலக்கு தேவை இல்லை என, பொறியாளர்கள் கூறுகின்றனர். மின் வாரியம் இதை தெளிவுபடுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Vasudeva
ஜூன் 26, 2024 12:58

அதிகாரிகளை தேடி நுகர்வோர் என்ற விதியை மாற்றி நுகர்வோரை நாடி அதிகாரிகள் 2 நாட்களுக்குள் சென்று பார்த்து வேலையை முடிக்க வேண்டும், இல்லையேல் அவர்கள் சம்பளத்தில் தண்டம் விதிக்க வேண்டும், மெத்தன போக்கிற்க்கு லட்சங்களில் தண்டம் விதித்தால்தான் லஞ்சம் ஒழியும்


Saravanan
ஜூன் 25, 2024 21:47

காண்டாக்ட் நம்பர் ப்ளீஸ்


pattikkaattaan
ஜூன் 25, 2024 14:49

ஆப்-கிரிட் சோலார் அமையுங்கள். மின் வாரியத்திடம் அனுமதி பெற தேவையில்லை. செலவும் குறைவுதான். 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் கிடைக்கும். ஒரு பைசா மின் கட்டணம் இல்லை. என்னுடைய அலுவலகத்திற்கு off-grid அமைத்துள்ளேன். வங்கியில் லோன் கிடைக்கிறது. 3 வருடம் லோன் கட்டினால் அதன் பிறகு மின்சாரம் முழுதும் இலவசம்


Saravanan
ஜூன் 25, 2024 21:48

காண்டாக்ட் நம்பர் ப்ளீஸ்


Ethiraj
ஜூன் 25, 2024 11:14

Instead of giving 100 units free TNEB must allow 10 KW solar installation without any permission Net metering and 100% cost without wheeling ges to be allowed Capital expenditure and maintenance ges will get reduced drastically. TNEB must be leader in solar power We need not buy single unit from govt of india or private players.


இளஞ்செழியன்
ஜூன் 25, 2024 07:49

தத்திகளுக்கு எதையுமே ஒழுங்கா செய்யத் தெரியாது. துட்டு அடிப்பதில் மட்டும்.கில்லாடிகள்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை