உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புகார் மனுவை விசாரிப்பதில் அலட்சியம் தகவல் ஆணையம் மீது தொடரும் புகார்

புகார் மனுவை விசாரிப்பதில் அலட்சியம் தகவல் ஆணையம் மீது தொடரும் புகார்

சென்னை:சட்டப்படி உரிய தகவல் தராத, பொது தகவல் அலுவலர் மீது அளிக்கப்படும் புகார் மனுக்களை விசாரிப்பதில், தகவல் ஆணைய அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், வீட்டுவசதி வாரியம் சார்பில், குடியிருப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

குளறுபடி

அந்த வகையில், கோவையில் கணபதி உள்ளிட்ட பகுதிகளில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களில், விற்பனை பத்திரம் வழங்குவதில் குளறுபடி நடந்துள்ளது.இதில், பாதிக்கப்பட்டவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவர்களுக்கு சாதகமான உத்தரவுகள் வந்தாலும், அதை அமல்படுத்தாமல் வீட்டுவசதி வாரிய அதிகாரிகள், அலட்சியம் காட்டுவதாக புகார் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில், தமிழக வீட்டுவசதி வாரிய ஒதுக்கீட்டாளர் ஒருங்கிணைந்த நலச்சங்கம் சார்பில், வீட்டுவசதி வாரியத்துக்கு, 17 புகார்கள் அளிக்கப்பட்டன. இப்புகார்கள் மீது, வாரியத்தின் கோவை பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், 17 புகார் கடிதங்களின் பிரதிகளை கேட்டு, தகவல் அறியும் உரிமை சட்டப்படி சங்க நிர்வாகிகள் மனு செய்தனர்.

முறையீடு

அதற்கு, பொது தகவல் அலுவலர் உரிய பதில் அளிக்காத நிலையில், இந்த விவகாரத்தில் சங்க நிர்வாகிகள், மாநில தகவல் ஆணையத்தில் மேல் முறையீடு செய்தனர். ஆனால், ஆணையத்தின் செயல்பாடு மீதும் புகார் எழுந்துள்ளது.இதுகுறித்து, தமிழக வீட்டுவசதி வாரிய ஒதுக்கீட்டாளர் நல சங்க பொது செயலர் கே.ஜெயசந்திரன் கூறியதாவது:வீட்டுவசதி வாரிய கோவை பிரிவு அதிகாரி கருணாமூர்த்தி, எங்கள் மனுக்களுக்கு உரிய பதில் அளிக்க மறுத்து வருகிறார். இந்த விவகாரத்தில், தகவல் அறியும் உரிமை சட்டப்படி, அவர் மீது நடவடிக்கை எடுக்க போதிய முகாந்திரம் உள்ளது.இருப்பினும், ஆணைய அதிகாரிகள் எங்கள் புகார் மனுவில் இருக்கும் இணைப்பு ஆவணங்களை பார்க்காமல், அதையே திரும்ப கேட்டு அலைக்கழிக்கின்றனர். அதனால், மீண்டும் இணைப்பு ஆவணங்களை அளித்தோம். இருந்தும், ஆணைய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட, பொது தகவல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வருகின்றனர். ஆணையமே இப்படி செயல்பட்டால், எங்கு செல்வது என்று புரியாமல் தவிக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை