உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கள்ளசாராய சாவு எதிரொலி ; உயர் போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

கள்ளசாராய சாவு எதிரொலி ; உயர் போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு எதிரொலியாக, மதுவிலக்கு அமல் பிரிவு ஏ.டி.ஜி.பி., மகேஷ் குமார் அகர்வால், எஸ்.பி., செந்தில்குமார் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர். இது குறித்து கூறப்படுவதாவது: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்தது. இதனையடுத்து மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் மாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் மது விலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதலாக பொறுப்பு ஒதுக்கப்பட்டு உள்ளது.அதே போல் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எஸ்.பி., செந்தில்குமாரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கீழ்பாக்கம்காவல் துணை ஆணையர் கோபி சென்னை மதுவிலக்கு பிரிவு எஸ்.பி.,யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.மேலும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எஸ்.பி., செந்தில்குமார் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
ஜூன் 21, 2024 10:40

இடமாற்றம் என்ற ஏமாற்று வேலையை இன்றைக்குத்தான் நிறுத்தப் போகிறீர்கள் கொலைகாரர்களே? இந்த கையாலாகாத கபோதிகளின் ஆட்சியில் மக்கள் படும் துயரங்களுக்கு அளவில்லை. இதற்க்கு காரணமான ஆட்சியாளர்களின் குடும்பத்தில் ஒருத்தனை போட்டு தள்ளினால்தான் தெரியும் இதன் வலி. உதயநிதி கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் ஸ்டாலினுக்கு எப்படி இருக்கும்?


அப்பாக்கண்ணு
ஜூன் 21, 2024 10:38

இந்த அவமானத்துக்கு நாலு கள்ளச்சாராயம் வித்தவங்களை போட்டுத்தள்ளி பதவியை உதறியிருக்கலாம்.


சந்தனபாண்டியன்
ஜூன் 21, 2024 10:34

நாப்பத்தேழு பேருக்கு 4.7 கோடி. எவன் வூட்டுப் பணத்தை எடுத்து எவன் செத்ததற்கு குடுக்கறாங்க? ஒரு நீதிபதியாவது தாமாக முன்வந்து இந்த அநியாயத்தை விசாரிப்பாரா?


அப்புசாமி
ஜூன் 21, 2024 10:32

அதிகாரிங்களை மாத்துனா கள்ளச்சாராயம் ஒழிஞ்சிடுமா? டாஸ்மாக்ல பாட்டிலுக்கு 10, 20ந்னு மேலே வெச்சு வித்து கொள்ளையடிக்குறீங்களே உங்களைத்தான் மாத்தணும்.


ராமகிருஷ்ணன்
ஜூன் 21, 2024 10:09

பணம் பாதாளம் வரை பாயும். இந்த டூபாகூர் டகால்டி வேலையெல்லாம் திமுக தீவிரமாக செய்து மக்களிடம் நடிக்கும். யாரை எங்கே இடம் மாத்தி. என்னவாக போகிறது. கள்ளசாராய சாவுகளை கொலை கேசா மாத்தி, தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்தால் பொருத்தமா இருக்கும். நிச்சயம் வருங்காலத்தில் குற்றம் குறையும்.


raja
ஜூன் 21, 2024 06:34

எங்கடா அந்த கோவன் என்று கோவணம் கட்டிகிட்டு வந்தான் எடாபாடியார் ஆட்சியில், இந்த புயுஸ் மானுஸ் என்கிற இழி பிறவி சு வள்ளி போன்ற ஜந்துக்களையும் காணும்...


R Kay
ஜூன் 21, 2024 03:03

ஆளுங்கட்சியின் எடுபிடிகளாக செயல்பட்டவர்களுக்கு இதனால் எந்த பாதிப்புமிருக்காது. அவர்கள் வேறுவகையில் compensate செய்யப்படுவார்கள்.


konanki
ஜூன் 21, 2024 00:30

தமிழக காவல் துறை அதிகாரிகளை தவிர தமிழகத்தில் அனைவருக்கும் கள்ள குறிச்சியில் கள்ள சாராயம் காய்ச்சி விற்பனை செய்யும் அரசியல் வாதிகள் அதிகாரிகள் போலீஸ் காரர்கள் பற்றி நன்றாக தெரிந்து இருக்கிறது. இப்போது உள்ள காவல் துறை தமிழகத்தின் அவமான சின்னம்.


konanki
ஜூன் 21, 2024 00:26

எங்கோ ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்த சம்பவத்திற்கு சென்னையில் மெழுகு வர்த்தி ஏற்றி வைத்து கண்டனம் ஊர்வலம் நடத்திய கனிமொழி கருணாநிதி எம் பி இப்போது எங்க ஓடி ஒளிந்து விட்டார்??


Palani Ramachandran
ஜூன் 20, 2024 23:50

கள்ள சாராய சாவுகள் இது எப்படி கள்ள சாராயம் ஆகும். விற்பவன் தினமும் நடு ரோட்டில் விற்றுக் கொண்டிருக்கிறான். ஒரு நாளைக்கு ஆயிரம் பேர் இந்த சாராயத்தை குடிக்கிறார்கள். அவன் ஒன்றும் கள்ளத்தனமாக சாராயத்தை விற்கவில்லையே அப்படி இருக்கும் பொழுது இது எப்படி கள்ளச்சாராயணமாகும்? இது அங்கிருக்கும் போலீஸ்காரர்களுக்கும், போலீஸ் அதிகாரிகளுக்கும் தெரியாமல் இருக்குமா? அப்படி தெரியாமல் இருந்தால் அவர்கள் போலீஸ் வேலைக்கே தகுதி அற்றவர்கள்? இது அனைவருக்கும் தெரிந்தே நடக்கக்கூடிய ஒரு தொழில். இதில் அனைத்து அரசாங்க ஊழியர்களும் காவல் துறை சார்ந்த அனைத்து ஊழியர்களும் அனைத்து கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகளும் இதில் பங்கு பிரித்துக் கொள்கிறார்கள் என்பது ஊரறிந்த விஷயம்.. ஒவ்வோரு காவல் நிலையமும் இவ்வளவு பணம் வசூலித்துக் கொடுக்க வேண்டும் என்று எழுதப்படாத சட்டம் இந்தியா முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட நிகழ்வு நடக்கின்ற போது அங்கு இருக்கக்கூடிய காவல் துறையைச் சார்ந்த அதிகாரிகளை இடம் மாற்றம் செய்வது அல்லது சஸ்பெண்ட் செய்வது என்பது சாதாரண நிகழ்வு. இப்படிப்பட்ட கேடுகெட்ட நிகழ்விற்கு உறுதுணையாக இருந்த அப்பகுதியைச் சார்ந்த அனைத்து அதிகாரிகளையும் மற்றும் கலெக்டர் அவர்களையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் மேலும் இது தொடர்புடைய அமைச்சர்களை கைது செய்ய வேண்டும் இத்தகைய நடவடிக்கைகளை கவர்னர் அவர்கள் மேற்கொள்ள வேண்டும் இதற்குத்தான் கவர்னர் தேவை அதை விடுத்து இந்த கவர்னர்கள் வள்ளுவருக்கு காவி உடை அணிவதில் மிகவும் அக்கரையாக உள்ளனர். இந்த அரசாங்கத்தை ஏன் டிஸ்மி செய்யக்கூடாது என்று கவர்னர் உடனடியாக ஜனாதிபதி அவர்கள் பரிந்துரை செய்தல் வேண்டும். கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த குடும்பத்திற்கு ஒரு ரூபாய் கூட அரசாங்க பணம் தரக்கூடாது அவர்கள் ஒன்றும் நாட்டுக்காக தியாகம் செய்து உயிரிழக்கவில்லை.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை