உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பைக் விபத்தில் தம்பதி பலி

பைக் விபத்தில் தம்பதி பலி

நாகர்கோவில்: ஒரே பைக்கில் மூன்று பேர் கோயிலுக்கு சென்று திரும்பும் வழியில் ஏற்பட்ட விபத்தில் கணவன்,- மனைவி இறந்தனர். நாகர்கோவில் மேல சூரங்குடியை சேர்ந்தவர் பத்மநாபன் 62. மனைவி அன்னசெல்வி 54. இவர்கள் இருவரும் மகள் ராஜ சிவ நாராயணியுடன் 16, முப்பந்தல் கோயிலுக்கு சென்று திரும்பி கொண்டிருந்தனர். ஆரல்வாய்மொழி மூவேந்தர் பகுதியில் எதிரே வந்த கார் பைக் மீது மோதியது.மூன்று பேரும் துாக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு பத்மனாபன் முதலில் இறந்தார். நேற்று காலை அன்ன செல்வி இறந்தார். மகள் ராஜசிவ நாராயணிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை