உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தினமும் அம்மன் :6 நோய் தீர...

தினமும் அம்மன் :6 நோய் தீர...

மதுரை வண்டியூர் மாரியம்மனைக் கும்பிடு. அவளின் கருணை உன் நோயை தீர்க்கும். காவல் தெய்வமான இவள் சிரித்த முகத்துடன் இடது காலை தொங்கவிட்டும், வலதுகாலை மடித்தபடி இருக்கிறாள். காலுக்கு கீழே மகிஷாசுரன் இருக்கிறான். சுப நிகழ்ச்சிக்காக பூக்கட்டி அம்மனிடம் உத்தரவு கேட்கின்றனர். மதுரையைச் சுற்றியுள்ள கோயில்களில் விழா நடப்பதற்கு முன் முதல் பூஜையை இங்கு நடத்துகின்றனர். அம்மனுக்கு அபிேஷகம் செய்த தீர்த்தத்தை குடித்தால் அம்மை குணமாகும். கண் நோய் தீர வெள்ளி கண்மலர், தோல் நோய் தீர உப்பும், மிளகும் காணிக்கை செலுத்துகின்றனர். அரசமர விநாயகர், பேச்சியம்மன் சன்னதிகள் உள்ளன. எப்படி செல்வதுமதுரையில் இருந்து தெப்பக்குளம் செல்லும் சாலையில் 4 கி.மீ.,நேரம்: காலை 6:00 - இரவு 9:00 மணிதொடர்புக்கு0452 - 231 1475


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை