மேலும் செய்திகள்
தமிழ் கற்க வந்துள்ள வாரணாசி மாணவர்கள்
30 minutes ago
தமிழகம் 20 ஆண்டுகள் முன்னோக்கி பயணிக்கிறது: முதல்வர் ஸ்டாலின்
46 minutes ago | 5
தமிழகம் முழுதும் கலை திருவிழா முதல்வர் உத்தரவு!
59 minutes ago
கொடைக்கானல் : கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை எதிரொலியாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான கொடைக்கானல், அதை சுற்றியுள்ள பகுதிகளில் இரு தினங்களாக மழை பெய்கிறது. நேற்று மதியம், 2:00 மணிக்கு மிதமாக தொடங்கிய மழை தொடர்ந்து கனமழையாக இரண்டு மணி நேரம் கொட்டி தீர்த்தது.இடி, மின்னலுடன் சூறைக்காற்று வீசியதால் ரோட்டில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இங்குள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. தாண்டிக்குடி, கே.சி பட்டி பகுதியில் கனமழைக்கு மரம் சாய்ந்து, அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இப்பகுதியில் சிறிது நேரம் ஆலங்கட்டி மழை பெய்தது. மின்தடை ஏற்பட்டு மலை கிராமங்கள் இருளில் மூழ்கின. காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவியது.தற்போதைய மழை மலைத்தோட்டப்பயிர்களான காபி, மிளகு, வாழை, ஏலக்காய் உள்ளிட்ட பயிர்களுக்கு ஏற்றதாக அமைந்தது. அதே நிலையில் தாழ்வான பகுதியில் பயிரிடப்பட்ட பீன்ஸ், சவ்சவ், அவரை உள்ளிட்ட குறு விவசாய பயிர்களை தண்ணீர் சூழ்ந்தன.
30 minutes ago
46 minutes ago | 5
59 minutes ago