உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பழனிசாமிக்கு பதில் தனபால் முதல்வர்: தலித் எம்.எல்.ஏ.,க்களே ஏற்கவில்லை

பழனிசாமிக்கு பதில் தனபால் முதல்வர்: தலித் எம்.எல்.ஏ.,க்களே ஏற்கவில்லை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சசிகலாவின் சகோதரர் திவாகரன், செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது: பழனிசாமியை முதல்வராக தேர்ந்தெடுத்த பின், தினகரனுடன், பழனிசாமிக்கு மோதல் போக்கு ஏற்பட்டது.இதற்கு தீர்வு காண, தனபாலை முதல்வராக ஆக்கலாம் என்று கூறி, சசிகலாவிடம் முன்மொழிந்தேன்.அதை, திருமாவளவன் உள்ளிட்டோர் வரவேற்றனர். ஆனால், அ.தி.மு.க.,வில் இருந்த, 35 தலித் எம்.எல்.ஏ.,க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.மக்கள் நலத் திட்டங்களை தி.மு.க., அரசு சரியாக செயல்படுத்தி வருகிறது. இருப்பினும், சட்டம் - ஒழுங்கு பிரச்னையில், கவனம் செலுத்த வேண்டும். தி.மு.க., மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருவதால் தான், தமிழகத்துக்கு போதுமான அளவுக்கு நிதிகள் வருவது இல்லை. இதனால் பாதிக்கப்படுவது மக்கள் தான்.மத்திய அரசு புதிய கல்வித் திட்டத்தின் கீழ், ஸ்ரீ பள்ளிகளை நிறுவச் சொல்கிறது. ஆனால், மாநில அரசோ புதிய கல்விக் கொள்கையை காட்டி அதை மறுக்கிறது. இவர்களுக்கு இடையில் மாட்டி, சிக்கி தவிப்பது என்னை போன்ற கல்வியாளர்களும், மாணவ, மாணவியரும் தான்.மத்திய அரசு, கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்பது தான், என்னைப் போன்றவர்களின் கோரிக்கையாக உள்ளது.பழனிசாமிக்கு அட்வைஸ் செய்கின்ற அளவுக்கு, நான் பெரிய ஆள் இல்லை. அவர், என்னை விட சீனியர்; இருந்தாலும், பழனிசாமி உள்ளடக்கியே அ.தி.மு.க., ஒருங்கிணைப்பு நடக்க வேண்டும்.தமிழக அரசியல் ஒரு காலத்தில் நன்றாக இருந்தது. தற்போது, தனிமனித தரமற்ற விமர்சனங்கள் செய்யப்படுகின்றன.தேர்தல் நேரத்தில் மட்டும் அரசியல் செய்ய வேண்டும். மற்ற நேரங்களில் அனைவரிடமும் சுமுகமாக இருக்க வேண்டும்,இவ்வாறு அவர் கூறினார்.

கருத்தில்லை!

முதலில் நான் சபாநாயகராக இருந்து, பழனிசாமி முதல்வராக இருந்த கால கட்டத்தில், தினகரனுக்கும், பழனிசாமிக்கும் மோதல் போக்கு இருந்ததா என்பது குறித்து எனக்கு தெரியவில்லை. அப்படியிருக்கையில், எதை வைத்து திவாகரன் அப்படி சொல்லி இருக்கக் கூடும் என்றும் என்னால் யூகிக்க முடியவில்லை. தெரியாத ஒரு விஷயத்துக்கு என்னால் எந்தக் கருத்தையும் சொல்ல முடியவில்லை.-- தனபால் முன்னாள் சபாநாயகர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

ஆரூர் ரங்
ஆக 31, 2024 11:01

தமிழகமே போலி பிற்பட்ட வகுப்பினரது ஆதிக்கத்தில்தான் உள்ளது. ஆணவக்கொலை , வன்கொடுமை நிகழவுகளுக்கு நிறைய பட்டியலின மக்கள் குற்றம் கூறுவது நிலவுடைமை நடுச்சாதி ஆட்களைத்தான். மற்ற விளிம்புநிலை சாதியினரை கீழாக நினைப்பவர்கள் நாடாளத் தகுதியற்றவர்கள். ஆனால் திராவிஷ கட்சிகள்( வாக்கு வங்கிக்காக) திசைதிருப்பி கைகாட்டுவது சம்பவங்களுக்கு சம்பந்தமேயில்லாத முற்பட்ட சமூகங்களையே. இதைப்பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.


Rajarajan
ஆக 31, 2024 09:30

அப்போ அந்த முன்னேறிய பிரிவினரை திட்டுவதெல்லாம் வெறும் அரசியலுக்கு தானே ?? இதுபற்றி எந்த தனியார் ஊடகமும் இதுவரை விவாதம் நடத்தவில்லையே ??


Kasimani Baskaran
ஆக 31, 2024 07:15

திராவிடக்கட்சிகள் என்றுமே நேர்மையாக இருந்ததாக சரித்திரம் இல்லை. அப்படி இருந்தும் தெரியாதது போல இவர்களின் அடிப்படை குணாதிசயம்.


Duruvesan
ஆக 31, 2024 06:54

முதல்ல படிப்புன்னா என்னன்னு சொல்லு பார்க்கலாம், மாநிலமோ மத்தியோ எனக்கு எதுவும் செய்ய வேணாம், நான் படிக்க வெக்கிறேன், என் பிள்ளைகள் புத்திசாலி, கண்டவனெல்லாம் பிள்ளைகள் படிப்புக்கு கஷ்ட படுதுன்னு சொல்ல வேணாம்


புதிய வீடியோ