மேலும் செய்திகள்
ஸ்டாலின் அனைவருக்குமான முதல்வரா? அண்ணாமலை கேள்வி
1 hour(s) ago | 9
அரியலுார் - நாமக்கல் ரயில் பாதை சாத்தியக்கூறு ஆய்வு நிறைவு
9 hour(s) ago | 2
வேடசந்துார்:''2019ல் தேர்தல் பிரசாரத்தின்போது இளைஞர்களுக்கு வேலை வாங்கித் தருவோம் என்று கூறினீர்களே. யாருக்காவது வேலை வாங்கித் தந்தீர்களா'' என திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் நாகம்பட்டியில் பிரசாரம் செய்த கரூர் காங்., வேட்பாளர் ஜோதிமணி காரை வழி மறித்த வாலிபர் கேள்வி எழுப்பி அவருடன் வாக்குவாதம் செய்தார்.ஜோதிமணி எம்.பி., நேற்று வேடசந்துார் நாகம்பட்டியில் பிரசாரம் செய்தார். அப்போது அவரது காரை வழி மறித்த அதே ஊரைச் சேர்ந்த பட்டதாரி வாலிபரான வசந்த் 26, என்பவர் '2019 லோக்சபா தேர்தலின் போது வெற்றி பெற்றால் ஏராளமான இளைஞர்களுக்கு அரசு வேலை வாங்கித் தருவோம் என்று கூறினீர்களே.இந்த ஊரில் யாருக்காவது வேலை வாங்கித்தந்தீர்களா அல்லது இந்த தொகுதியில் தான் யாருக்காவது வேலை வாங்கித் தந்தீர்களா... நான் உங்களுக்குத்தான். ஓட்டளித்தேன். பதில் சொல்லுங்கள் 'என்றார். இதனால் அங்கு சலசலப்பு நிலவியது.சுதாரித்த ஜோதிமணி வேகமாக காரிலிருந்து இறங்கியபடி 'மோடி ஆட்சியில் இப்படித்தான் நடக்கும். காங்., ஆட்சி அமைத்து ராகுல் பிரதமர் ஆனால் அரசு வேலை கண்டிப்பாக ஏராளமானோருக்கு வாங்கிக் கொடுப்போம்' என்றார். அதற்குள் அருகில் இருந்தவர்கள் அந்த வாலிபரை சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றனர். இதன்பின் ஜோதிமணி காரில் ஏறி சென்றார்.
1 hour(s) ago | 9
9 hour(s) ago | 2