உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டாக்டர்களை அங்கீகரிக்க மறுக்கும் தி.மு.க., அரசு

டாக்டர்களை அங்கீகரிக்க மறுக்கும் தி.மு.க., அரசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அரசு டாக்டர்களை தி.மு.க., அரசு அங்கீகரிக்க மறுப்பதாக அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்ட குழு தலைவர் எஸ்.பெருமாள் பிள்ளை தெரிவித்தார்இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, ‛அ.தி.மு.க., ஆட்சியில் ஊதிய உயர்வு கேட்டு, நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது, அப்போதைய எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலின் எங்களை சந்தித்து, தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்தார். ஆட்சிக்கு வந்து, மூன்றாண்டுகள் முடிந்தும், எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்ற வருத்தமும், ஏக்கமும் உள்ளது.கர்நாடகாவில், கொரோனாவின் முதல் அலையின் போதே, டாக்டர்களின் கோரிக்கையை, அம்மாநில அரசு நிறைவேற்றியது. ஆனால், கொரோனாவின் மூன்று அலைகளில் உயிரை பணயம் வைத்து பணியாற்றி உள்ளோம். எங்களது கோரிக்கையை, தமிழக அரசு நிறைவேற்ற மறுக்கிறது. அரசு டாக்டர்களை அங்கீகரிக்க மறுக்கும், ஒரே மாநிலமாக தமிழகம் உள்ளது. எனவே, பல ஆண்டு கோரிக்கையான ஊதிய உயர்வு வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

subramanian
மே 16, 2024 22:24

மதிப்பிற்குரிய டாக்டர்களே, படி அரிசி, ஏக்கர் நிலம், மாதம் ஆயிரம் ரூபாய் எதையும் செய்யாத அரசு, உங்களுக்கு மட்டும் செய்யுமா? எல்லோருக்கும் போட்ட அதே நாமம் தான்


jayvee
மே 16, 2024 13:08

சில மருத்தவ பணியாளர்களின் அலட்சியமும் காரோண மரணத்திற்கு காரணம் உதாரணம் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் குறிப்பாக காரோண வார்டில் நடந்த கூத்துக்கள் கரோனா நோயாளிகளை உறவினர்களும் கூடவே இருந்து கவனித்துக்கொண்டாள் மட்டுமே அனுமதி என்ற கட்டுப்பாடு


Usha Kumar
மே 16, 2024 12:38

வாய்ப்பில்லை


JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 16, 2024 17:24

வாய்ப்பு உண்டு இது போன்ற பல கோரிக்கைகளையும் திமுக நிறைவேற்றும் எப்போது என்றால் சட்ட சபை தேர்தலுக்கு மாதம் முன்பு ஒவ்வொரு கோரிக்கையும் நிறைவேற்றுவார்கள் தேர்தல் போது நாங்கள் அணைத்து கோரிக்கை நிறைவேற்றி விட்டோம் என கூறி ஓட்டு கேட்பார்கள் மக்கள் ஏமாந்து வாக்களித்தால் மீண்டும் ஆட்சிக்கு வருவார்கள் இல்லை என்றால் யார் ஆட்சிக்கு வருகிறார்களோ அவர்கள் பொருளாதார சிக்கலில் சிக்கி திணறும் போது திமுக போராட்டம் மேல் போராட்டம் கோர்ட் வழக்குகள் போட்டு ஆட்சியாளர்கள் நிம்மதி இல்லாமல் செய்வார்கள் இது தான் திமுகவின் கலைஞர் கருணாநிதி அவர்களின் ஃபார்முலா


Usha Kumar
மே 16, 2024 12:36

வாய்ப்பு இல்லை ராஜா


Sampath Kumar
மே 16, 2024 08:55

நிச்சயம் நிறை வேற்றுவார்


Usha Kumar
மே 16, 2024 12:36

வாய்ப்பில்லை ராசா


ராமகிருஷ்ணன்
மே 16, 2024 06:31

ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகள் தண்ணீர் மேல் எழுதப்பட்ட எழுத்து என்பது கூட தெரியாமல் எப்படி டாக்டர் ஆனீர்கள்.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி