உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மீனவர்களின் உயிரோடு விளையாடாதீர்கள்: தமிமுன் அன்சாரி  எச்சரிக்கை

மீனவர்களின் உயிரோடு விளையாடாதீர்கள்: தமிமுன் அன்சாரி  எச்சரிக்கை

ராமநாதபுரம்: கச்சத்தீவு குறித்து பேசி மீனவர்கள் உயிரோடு விளையாடாதீர்கள், என மனித நேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்தார்.ராமநாதபுரத்தில் அவர் கூறியது: நாட்டில் பல பிரச்னைகள் இருக்கும் போது பிரதமர் கச்சத்தீவு பற்றி பேசியுள்ளார். கச்சத்தீவு இந்திய நாட்டின் வெளியுறவுத்துறையும், இலங்கை வெளியுறவுத்துறையும் சம்பந்தப்பட்டது. கச்சத்தீவை திரும்ப பெற முடியாது.தற்போதுள்ள ஒப்பந்தத்தின் படி மீனவர்களுக்கு கூடுதல் உரிமைகளை பெற்றுக்கொடுக்க முடியும். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் ஒரு யோசனை தெரிவித்தார். இரண்டு நாட்கள் இந்திய மீனவர்களும், 2 நாட்கள் இலங்கை மீனவர்கள் சுழற்சி முறையில் மீன் பிடித்தால் பிரச்னைகள் குறையும். இதனை இரு நாட்டு மீனவர்களும் பேசி தீர்க்க வேண்டும். மீனவர்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்கி அவர்களது உயிரோடு விளையாடாதீர்கள், என அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி