உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜி.எஸ்.டி.,யில் தவறான தகவல் தரும் திராவிட மாடல் அரசு: ஆடிட்டர் சேகர்

ஜி.எஸ்.டி.,யில் தவறான தகவல் தரும் திராவிட மாடல் அரசு: ஆடிட்டர் சேகர்

சென்னை:''ஜி.எஸ்.டி., வந்த பின், தமிழகத்தின் வருவாய் இரட்டிப்பாகியுள்ளது. ஆனால், வருவாய் குறைந்து விட்டதாக, திராவிட மாடல் அரசு, தவறான தகவலை தெரிவிக்கிறது,'' என, ஆடிட்டர் ஜி.சேகர் தெரிவித்தார். இதுகுறித்து, அவர் கூறியதாவது:ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமலாகும் முன், 'வாட்' என்ற மதிப்பு கூட்டு வரி இருந்தது. தமிழகத்திற்கு, 2012 - 13ல் மதிப்பு கூட்டு வரியாக, 25,041 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. கடந்த, 2013 - 14ல் மதிப்பு கூட்டு வரியாக, 25,875 கோடி ரூபாய்; 14 - 15ல், 27,783 கோடி ரூபாய்; 15 - 16ல், 29,786 கோடி ரூபாய்; 16 - 17ல், 31,304 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. கடந்த, 2017 ஜூலை, 1ல் ஜி.எஸ்.டி., வரி அமல்படுத்தப்பட்டது. அதில், பெட்ரோல், டீசல், மது வகைகள் இடம்பெறவில்லை. அந்த ஆண்டில், ஒன்பது மாதங்களில் ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்பட்ட பொருட்களில் இருந்து, 24,907 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி., வருவாய் கிடைத்தது. ஜி.எஸ்.டி., அமலாவதற்கு முந்தைய மூன்று மாதங்களில் மதிப்பு கூட்டு வரியாக, 7,359 கோடி ரூபாய் கிடைத்தது. எனவே, 2017 - 18ல் மொத்தம், 32,266 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. ஜி.எஸ்.டி., வாயிலாக, 2018 - 19ல், 41,767 கோடி ரூபாய்; 19 - 20ல், 41,369 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. கொரோனா ஊரடங்கால், 2020 - 21ல் ஜி.எஸ்.டி., வருவாய், 37,910 கோடி ரூபாயாக குறைந்தது. கடந்த, 2021 - 22ல், ஜி.எஸ்.டி., வாயிலாக, 48,916 கோடி ரூபாயும்; 2022 - 23ல், 58,194 கோடி ரூபாயும் வருவாய் கிடைத்தது. இது, 2023 - 24ல், 63,000 கோடி ரூபாயை தாண்டி விடும்.ஜி.எஸ்.டி., அமலுக்கு பின் தமிழகத்தின் வருவாய் இரட்டிப்பாகியுள்ளது. ஆனால், வருவாய் குறைந்து விட்டது என்ற தவறான தகவலை தெரிவித்து, திராவிட மாடல் அரசு, மக்களை திசை திருப்புகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

தாமரை மலர்கிறது
மே 02, 2024 20:19

ஜிஎஸ்டி வரியை தேசபக்தி வரி என்று மாற்றவேண்டும் பொதுமக்கள் தானாகமுன்வந்து இந்த நாட்டின் நலன்கருதி அரசுக்கு கொடுக்கும் பணம் வருவாய் உயரும்போது வரியும் உயரத்தானே செய்யும் அவ்வையார் இன்று உயிரோடு இருந்தால், ஜிஎஸ்டி வரி உயர என்று பாடி இருப்பார் காரணம் வரி உயர்ந்து இருந்தால், வருவாய் உயர்ந்து இருக்கும் மக்கள் செழிப்புடன் இருந்திருப்பர் என்று அர்த்தம்


V RAMASWAMY
மே 02, 2024 18:16

GST பற்றிய புரிதலும் அவர்களுக்கு இல்லை, புரிந்து கொள்வதற்கு தயாராகவும் இல்லை, அப்பொழுதான் எதாவது உளறிக்கொட்டிக்கொண்டே இருக்கமுடியும் இவர்கள் சொல்வதை எல்லாம் மக்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்


panneer selvam
மே 02, 2024 18:06

Auditor Sekar Sir , you might have noticed that strategy of DMK is to proclaim we are the first in everything supported by their medias but they never give data and material evidence Just shout with a general statement as "WE are the First" and Best Again these messages are spread by friendly party leaders and family channels Simple marketing technic


krishnamurthy
மே 02, 2024 17:08

உரிய உண்மையான பதிலை தமிழக அரசு தரவேண்டும்


A.SIVASHANMUGAM
மே 02, 2024 06:35

உண்மையை உரக்க சொன்னதற்கு நன்றி ஐயா


Ramachandran Subramaniam
மே 02, 2024 03:31

நன்றி விடியா அரசு வாய் திறந்தால் பொய் தான் வரும்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை