| ADDED : ஜூலை 25, 2024 10:37 PM
திண்டிவனம்:விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பத்தில் உள்ள சரசுவதி கலை அறிவியல் கல்லுாரி வளாகத்தில், பா.ம.க., நிறுவனர் ராமதாசின் 86வது பிறந்த நாளை முன்னிட்டு முப்பெரும் விழா நடந்தது. விழாவில், பா.ம.க.,நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:கேரளாவில் ஈழவர் ஜாதியை சேர்ந்தோர், நான்கு முறை முதல்வராக இருந்துள்ளனர்.ஆனால், தமிழகத்தில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக கேட்டு வருகிறோம். முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து, வன்னியர்களுக்கு10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தேன். ஸ்டாலினும் சரி என தலையாட்டினார்.தமிழக மக்கள் இன்னும் இரண்டு மாதத்தில் இடஒதுக்கீடு குறித்து பேசப் போகிறார்கள். ஊமை ஜனங்கள் பேசப் போகிறார்கள். நாடே கிடுகிடுக்க, நாடே ஸ்தம்பிக்க. ஊமை ஜனங்களா இருந்த மக்களுக்கு எப்படி இவ்வளவு துணிச்சல், தைரியம் வந்தது என்று மற்றவங்க பேசப் போகிறார்கள். ஆட்சியில் இருக்கிறவர்களின் குடை சாய, கோலேச்சியவர்கள் போதுமடா சாமி என்று விட்டு ஓட, ஊமை ஜனங்களுக்கு தைரியம் வர, அவர்கள் பேசப் போகிறார்கள். அப்போது இந்த நாடு தாங்காது. ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்துணும் என்று உன்கிட்ட கேட்டா, நீ மத்திய அரசை காட்ற. அதற்கு நீ எதற்கு முதல் அமைச்சர். இவ்வாறு ராமதாஸ் பேசினார்.