மேலும் செய்திகள்
பொறுப்பு டிஜிபி பதவி: அபய் குமார் சிங்கிற்கு கூடுதலாக ஒப்படைப்பு
2 hour(s) ago | 3
மொழி அரசியலை ஒழிக்க வேண்டும்: அண்ணாமலை
3 hour(s) ago | 5
மூணாறு : கேரளா இடுக்கி மாவட்டத்தில் மழை குறைந்த போதும் பலத்த காற்றால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன. மூணாறு- உடுமலைபேட்டை ரோட்டில் மறையூர் அருகே மரம் சாய்ந்து இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இடுக்கி மாவட்டத்தில் கடந்த ஐந்து நாட்களாக பலத்த மழை பெய்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மழை குறைந்தது. நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி மாவட்டத்தில் சராசரி மழை 32.8 மி.மீ., பதிவானது. அதிகபட்சமாக தேவிகுளம் தாலுகாவில் 61.6 மி.மீ., மழை பெய்தது.நேற்று பகலில் மழை குறைந்தபோதும் பலத்த காற்று வீசியது. மூணாறு- உடுமலைபேட்டை ரோட்டில் மறையூர் அருகே கரிமுட்டி பகுதியில் மரம் வேரோடு ரோட்டில் சாய்ந்து இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின்தடை
மறையூர், காந்தலூர் ஊராட்சிகளுக்கு பள்ளிவாசல் நீர் மின்நிலையத்தில் இருந்து மூணாறு வழியாக மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது. அதற்கு ரோடு ஓரங்களில் மின் கம்பங்கள் நடப்பட்டுள்ளன. ஜூலை 15ல் பெய்த பலத்த மழையில் மண்சரிவால் மரங்கள் சாய்ந்தும் மின் கம்பங்கள் சேதமடைந்தன. அதனால் இரண்டு ஊராட்சிகளிலும் கடந்த ஐந்து நாட்களாக மின்சாரம் இன்றி இருளில் மக்கள் தவித்து வருகின்றனர். சாந்தாம்பாறை அருகே மரம் முறிந்து பள்ளி கட்டத்தின் மீது விழுந்தது. பள்ளிக்கு விடுமுறை என்பதால் விபத்து தவிர்க்கப்பட்டது.மூணாறில் நேற்று மழை குறைந்தது. நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி 7 செ.மீ., பதிவானது. மின்சாரம் இன்றி தவிப்பு
மூணாறு அருகே பேதமேடு பகுதியில் காற்றில் 10க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதமடைந்ததால் ஐந்து நாட்களாக மின்சாரம் இல்லை. தேவிகுளம் உள்பட பல்வேறு பகுதிகளில் மின்சாரம் இல்லாததால் மாணவர்கள் மெழுகுவர்த்தி உள்பட விளக்குகளின் உதவியுடன் பாடங்களை படித்தனர். மின்இணைப்பு வழங்க பணி நடக்கிறது.
2 hour(s) ago | 3
3 hour(s) ago | 5