உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருவாரூரில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து; மீட்பு பணி தீவிரம்

திருவாரூரில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து; மீட்பு பணி தீவிரம்

திருவாரூர்: திருவாரூரில் இருந்து காரைக்கால் நோக்கி சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. மீட்பு பணி துரிதமாக நடந்து வருகிறது. திருவாரூர் ரயில் நிலையத்தில் இருந்து புதிய ரயில் பாதை பணிக்காக ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு 12 பெட்டிகளுடன் காரைக்கால் நோக்கி புறப்பட்டது. அப்போது ரயில் இன்ஜின் தடம் புரண்டு ரயில் விபத்துக்குள்ளானது. இது குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தற்போது சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. ரயில் பெட்டிகளை மாற்று இஞ்சின் மூலமாக காரைக்காலுக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வேதாரண்யம் அகத்திய மலை பகுதியில் இருந்து திருவாரூர் நோக்கி வரக் கூடிய ரயில் பாதை இந்த விபத்து நடந்துள்ளது. அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Muralidharan S
பிப் 24, 2025 17:02

"சரக்கு" ரயில் ... அதான்.. நிலை தடுமாறி, தடம் புரண்டு இருக்கும்...


AKM KV SENTHIL MUSCAT
பிப் 24, 2025 13:55

ஊரின் பெயர் அகத்திய மலை அல்ல "அகஸ்தியன் பள்ளி"


அப்பாவி
பிப் 24, 2025 11:07

அஸ்வினியின் எம்.பி.ஏ ஆளுமை இப்போ தெற்கேயும் வந்திருச்சு.


V Venkatachalam
பிப் 24, 2025 14:09

நீங்க சொல்றது கரீட்டுதான்.. நம்ம 10ம் கிளாஸ் மமுந்திரீங்க கிட்ட இந்த துறை இருந்தா அந்த ரயில் இன்ஜின அதே இடத்தில் ஒரு முறை இல்ல 10 முறை இறங்கிடும்..இப்ப திராவிட மாடல் ஆட்சி ன்னு சொல்ற சான்ஸ் போச்சே..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை