உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தங்கம் விலை 2 நாளில் ரூ.1,120 குறைவு

தங்கம் விலை 2 நாளில் ரூ.1,120 குறைவு

சென்னை:தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம், 70 ரூபாய் குறைந்து, 6,400 ரூபாய்க்கும்; சவரன், 560 ரூபாய் சரிவடைந்து, 51,200 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. வெள்ளி கிராம், 87.50 ரூபாய்க்கு விற்பனையானது.நேற்று, தங்கம் விலை கிராமுக்கு மேலும், 70 ரூபாய் குறைந்து, 6,330 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 560 ரூபாய் சரிவடைந்து, 50,640 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு, 50 காசு குறைந்து, 87 ரூபாய்க்கு விற்கப்பட்டது.எனவே, கடந்த இரு நாட்களில் மட்டும் தங்கம் சவரனுக்கு, 1,120 ரூபாய் சரிவடைந்து உள்ளது. இதனால், நீண்ட நாட்களுக்கு பின், சவரன் தங்கம் விலை, 51,000 ரூபாய்க்கு கீழ் சென்று உள்ளது. விலை குறைவால், பலரும் நகை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், பண்டிகை காலம் போல், தற்போது நகை கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ