உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மீண்டும் ஏறுகிறது தங்கம் விலை ஒரே நாளில் ரூ.840 உயர்வு 

மீண்டும் ஏறுகிறது தங்கம் விலை ஒரே நாளில் ரூ.840 உயர்வு 

சென்னை: தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 6,565 ரூபாய்க்கும், சவரன் 52,520 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 89 ரூபாய்க்கு விற்கப்பட்டது.தங்கம் விலை கிராமுக்கு நேற்று, 105 ரூபாய் அதிகரித்து, 6,670 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 840 ரூபாய் உயர்ந்து, 53,360 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, 2 ரூபாய் அதிகரித்து 91 ரூபாய்க்கு விற்பனையானது. இதுகுறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:உலக நாடுகளின் நடவடிக்கைகள், பொருளாதாரத்திற்கு சாதகமான சூழலாக இல்லை. அமெரிக்காவில், வங்கிகளில் வைப்பு நிதிக்கான வட்டி குறைப்பு, முடிவுக்கு வராத ரஷ்யா - உக்ரைன் போர் போன்ற காரணங்களால், உலக முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர்.இதனால், உலக சந்தையில் தங்கம் விலை உயர்ந்ததால், உள்நாட்டில் அதன் விலை அதிகரித்துள்ளது. வரும் நாட்களில் தங்கம் விலை மேலும் உயரக்கூடும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை