உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆளுங்கட்சிக்கு பாடம் புகட்ட அரசு ஊழியர்கள் முடிவு

ஆளுங்கட்சிக்கு பாடம் புகட்ட அரசு ஊழியர்கள் முடிவு

கடந்த இரு ஆண்டுகளில் மட்டும், 60,000 கோடி ரூபாய்க்கு மின் கட்டணம், சொத்து வரி, குடிநீர் கட்டணம், பால் விலை, பத்திரப்பதிவு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அரிசி, மளிகை பொருட்கள் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், ஒவ்வொரு ஏழை, நடுத்தர குடும்பத்தின் செலவுகள் மாதத்திற்கு, 5,000 முதல் 10,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதுதான் தி.மு.க., அரசின் சாதனை. அதை நினைத்தாலே மக்கள் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.தி.மு.க.,வுக்கு எப்போதும் ஆதரவளிக்கும் ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் இப்போது அக்கட்சிக்கு பாடம் புகட்ட தயாராகி விட்டனர். பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட அவர்களின் கோரிக்கையை, தி.மு.க., அரசு நிறைவேற்றவில்லை. ஓட்டுப்பதிவின் போதும், ஓட்டுப்பதிவு முடிந்த பின்னும் ஆளுங்கட்சியும், ஆண்ட கட்சியும் தங்களின் பண பலத்தையும், படைபலத்தையும் பயன்படுத்தி, கள்ள ஓட்டுகளை கொத்துக் கொத்தாக போட முயற்சிக்கும். அதை பா.ம.க.,வினர் முறியடிக்க வேண்டும்.- ராமதாஸ்,பா.ம.க., நிறுவனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை