உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நுாலகங்களுக்கு சென்று கவர்னர் நேரில் ஆய்வு செய்யலாம்: மகேஷ்

நுாலகங்களுக்கு சென்று கவர்னர் நேரில் ஆய்வு செய்யலாம்: மகேஷ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி: 'தமிழக அரசின் பாடத் திட்டம் அவ்வளவு துாரம் தகுதியானது அல்ல' என தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கூறியிருந்தார். அதற்கு பதில் அளிக்கும் வகையில், திருச்சியில் நேற்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அளித்த பேட்டி: மத்திய அரசின் சமக்ர சிக்ஷான் திட்டத்துக்கு, ஆண்டுதோறும் 60 சதவீதம் நிதியை மத்திய அரசு வழங்கும். இந்த ஆண்டுக்கான 2,152 கோடி ரூபாயில் முதல் தவணையாக 573 கோடி ரூபாயை, கடந்த ஜூன் மாதமே வழங்கி இருக்க வேண்டும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=y3h49jxz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதுவரை அந்த நிதியை வழங்காததால், பள்ளிக் குழந்தைகளின் கல்வித் தரமும், 15,000த்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கான ஊதியமும் கேள்விக் குறியாகும். அதிகாரிகள் தரப்பில் பலமுறை கடிதம் எழுதிய போதிலும், தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான், மத்திய அரசின் நிதி கிடைக்கும் என்ற நிலை தான் நீடிக்கிறது. தமிழக முதல்வரின் வழிகாட்டுதல்படி அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும்.தமிழகத்தில் உள்ள 180 தொகுதிகளில் ஆய்வு செய்திருக்கிறேன். அங்குள்ள நுாலகங்களில், டி.என்.பி.எஸ்.சி., மற்றும் யு.பி.எஸ்.சி., போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்பவர்கள், தமிழக அரசின் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு பாடப் புத்தகங்களில் இருந்து தான் அதிகமான கேள்விகள் கேட்பதாக தெரிவிக்கின்றனர். அதனால், இன்னும் கூடுதலான புத்தகங்கள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் என்ன இருக்கிறதோ, அது தான் மாநில அரசின் பாடத்திட்டத்திலும் இருக்கிறது. ஆனால், மத்திய அரசின் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் உயர்ந்தது போலவும், தமிழக அரசின் பாடத்திட்டம் குறைந்தது போலவும் தமிழக கவர்னர் ரவி பேசி வருகிறார். அது தவறு. தேவையானால், தமிழக கவர்னரே நுாலகங்களுக்கு சென்று, போட்டித் தேர்வு எழுதுபவர்களிடம் நேரடியாக விசாரிக்கட்டும். அப்போது, எந்த பாடத்திட்டம் சிறந்தது என்பதை அவரே தெரிந்து கொள்வார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

RAJ
செப் 04, 2024 11:06

எத்தனை நூலகங்கள் கட்டடம் இன்றி செயல் படுகிறது ஆய்வூ செய்யங்கள் அந்தந்த மாவட்ட நூலக அதிகாரியிடம் லிஸ்ட் கேளுங்கள் ஐயா . அப்பறம் ஆளுனர்கு சொல்லுங்கள் மூடியே கிடக்கும் நூலகம் எவ்வளவு தெரியூமா


அப்பாவி
செப் 03, 2024 12:57

பேசாம இந்திக்கு ஓக்கெ சொல்கித்தொலையுங்க. கெவுனரும் வாய்மூடுவார். ஒன்றியத அரசு உதவித்தொகையும் டபுளாக்கி குடுத்திருவாங்க.


ஆரூர் ரங்
செப் 03, 2024 12:52

நீட் தேர்வு வினாக்களில் கூட தொண்ணூறு சதவீதம் தமிழக பாடத்திட்டத்திலுள்ளவைதான். பின் ஏன் நீட்டை எதிர்க்கிறார்? கல்லா நலனுக்காகத்தான்.


Sundar R
செப் 03, 2024 07:13

மேதகு ஆளுநர் சொல்வது சரி. பின்பு ஏன் பாண்டிச்சேரியில் தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்திற்கு அடியோடு முழுக்கு போட்டுவிட்டு மத்திய அரசின் பாடத்திட்டத்திற்கு முழுமையாக மாறியுள்ளார்கள்? ஏற்கனவே நல்ல தரமான மத்திய அரசின் பாடத்திட்டம் இருக்கும் போது எதற்காக மாநில அரசின் பாடத்திட்டம்? இது வேலையற்ற வேலை. திமுக அரசின் இந்த டபுள் ஜோக்கைப் பார்த்து அறிவார்ந்தவர்கள் சிரிக்கிறார்கள்.


VENKATASUBRAMANIAN
செப் 03, 2024 07:03

டிஎன்பிஸ்ஸி தேர்வில் நடந்த தில்லுமுல்லு தெரியாதா. மாணவர்களை எந்த தேர்வுக்கும் தயார் செய்யாமல் அரசியல் செய்யவேண்டியது. அகில இந்திய தேர்வுகளில் தமிழக மாணவர்களின் தரம் எப்படி உள்ளது என்று முடிவுகளே தெரிவிக்கிறது.


நிக்கோல்தாம்சன்
செப் 03, 2024 07:00

நூலகங்களுக்கும் கார்பொரேட் குடும்ப பதிப்பகங்களும் வெகு தூரமில்லையா மகேஷ் ?


rama adhavan
செப் 03, 2024 06:23

பின் ஏன் யூ பி எஸ் சி, வங்கி, ரயில்வே, விமானப் படை தேர்வுகளில் தமிழக அரசு பாடங்களில் படித்தவர்கள் தேர்வு விகிதம் மிக குறைவாக உள்ளது. நீட் தேர்விலும் குறைகிறது.


Kasimani Baskaran
செப் 03, 2024 05:42

என்னது போட்டித்தேர்வா. நீட் வேண்டாம் என்று ஒரு பக்கம் உருட்டிக்கொண்டு அடுத்த பக்கம் போட்டித்தேர்வுக்கு சிறப்பாக தயார் செய்கிறோம் என்று உருட்டுவதா. அக்கிரமம். நூலகங்களில் எல்லாம் திராவிட சித்தாந்தம் பற்றிய புத்தகங்களைத்தான் அதிகம் வாங்கி இருக்கிறார்கள்.


முக்கிய வீடியோ