உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மோசடி நிறுவனங்களால் பாதிப்பு தொகையை வழங்க கால வரம்பு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மோசடி நிறுவனங்களால் பாதிப்பு தொகையை வழங்க கால வரம்பு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை:மோசடி நிறுவனங்களால் பாதிக்கப்பட்டோரிடம் புகாரை பெற, நிறுவன சொத்துகளை அடையாளம் காண, அவற்றை முடக்க, ஏலம் விட, பாதிக்கப்பட்டோருக்கு தொகையை பட்டுவாடா செய்ய கால வரம்பு நிர்ணயித்து தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.மதுரை பைபாஸ் ரோடு எஸ்.எஸ்.காலனியில், 'நியோமேக்ஸ் பிராப்பர்டீஸ்' நிறுவனம் செயல்பட்டது. வாடிக்கையாளர்களிடம் டிபாசிட் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக அதன் இயக்குனர் கமலக்கண்ணன் உள்ளிட்ட சில நிர்வாகிகள் மீது மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்தனர்.கமலக்கண்ணனுக்கு முதலீட்டாளர் நல பாதுகாப்பு மதுரை சிறப்பு நீதிமன்றம் ஜாமின் அனுமதித்தது.

ஒற்றைச்சாளர முறை

அதற்கு எதிராக, விருதுநகர் மாவட்டம் சொக்கலிங்காபுரம் ரவிசங்கர், 'முதலீடு செய்து பாதிக்கப்பட்டுள்ளேன். போலி நிறுவனம் நடத்தி பலரை ஏமாற்றியுள்ளனர். டான்பிட் நீதிமன்றம் சரியாக பரிசீலிக்காமல் ஜாமின் அனுமதித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.அதுபோல, பலரும் மனுக்கள் தாக்கல் செய்தனர். அந்த மனுக்களை நீதிபதி எம்.தண்டபாணி விசாரித்தார். நிறுவன மோசடிகள் தொடர்பான வழக்குகள், விசாரணையின் தற்போதைய நிலை குறித்து அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.நீதிபதி: இதுவரை 10,000 கோடி ரூபாய்க்கு மோசடி நடந்துள்ளது. இதில், 851 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டோருக்கு 25 கோடி ரூபாய் திரும்ப வழங்கப்பட்டுள்ளது. பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணை மெதுவாக நடக்கிறது.நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்க, ஒற்றைச்சாளர முறையை ஏற்படுத்த வேண்டும். கீழமை நீதிமன்றம் வழக்கறிஞர் கமிஷனர்களை நியமித்தது ஏற்புடையதல்ல.இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

அறிக்கை தாக்கல்

பின், நீதிபதி பிறப்பித்த உத்தரவு: பாதிக்கப்பட்டோரிடம் புகாரை பெற்று வழக்கு பதிய, குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய, நிறுவன சொத்துக்களை அடையாளம் காண, அவற்றை முடக்க, ஏலம் விட, அதில் கிடைக்கும் வருவாய் மூலம் பாதிக்கப்பட்டோருக்கு தொகையை பட்டுவாடா செய்ய காலவரம்பு நிர்ணயிக்க வேண்டும். அது தொடர்பாக, அரசு தரப்பில் வரும் 27ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை