மேலும் செய்திகள்
எய்ட்ஸ் சங்க ஊழியர்கள் ஜன.4ல் உண்ணாவிரதம்
3 hour(s) ago
சென்னை:சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:நேற்று மாலை நிலவரப்படி மாநிலத்தில் 12 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டையொட்டி வெப்பம் பதிவானது. கோவை, சேலம், 38; சென்னை மீனம்பாக்கம், 39; தஞ்சாவூர், திருத்தணி, வேலுார், 40; ஈரோடு, மதுரை நகரம் 41; கரூர் பரமத்தி, மதுரை விமான நிலையம், திருநெல்வேலி, திருச்சியில், 42 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் நிலவியது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலுார், திருப்பத்துார் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்யும். சில இடங்களில் அதிக வெப்பம் பதிவாகும்போது காற்றில் கலந்துள்ள ஈரப்பதம் அதிகரிப்பால், அசவுகரியங்கள் ஏற்படும் என கூறப்பட்டுள்ளது.
3 hour(s) ago