உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 15 ஆண்டுக்கு பின் நெடுஞ்சாலை துறை சீரமைப்பு புதிய வட்டம், கோட்ட அலுவலகங்கள் உருவாக்கம்

15 ஆண்டுக்கு பின் நெடுஞ்சாலை துறை சீரமைப்பு புதிய வட்டம், கோட்ட அலுவலகங்கள் உருவாக்கம்

சென்னை:மாநிலத்தின் சாலை வசதி மற்றும் பராமரிப்பு பணிகளை மேம்படுத்தும் வகையில், 15 ஆண்டுகளுக்கு பின், நெடுஞ்சாலைத் துறை மறுசீரமைக்கப்பட்டு, புதிதாக வட்டம், கோட்ட அலுவலகங்கள் உருவாக்கப்படுகின்றன.தமிழக நெடுஞ்சாலைத் துறை வாயிலாக, மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட முக்கிய சாலைகள், மாவட்ட இதர சாலைகள் உள்ளிட்ட, 74,000 கி.மீ., சாலைகள் பராமரிக்கப்படுகின்றன. சாலைகள் விரிவாக்கம், மேம்பாலங்கள், தரைப்பாலங்கள் கட்டுமானம் உள்ளிட்ட பணிகளும் நடந்து வருகின்றன. ஊரக சாலைகளை கையகப்படுத்தி, அவற்றை தரம் உயர்த்தும் பணிகளையும், நெடுஞ்சாலைத் துறை மேற்கொண்டு வருகிறது. இப்பணிகளை மேற்கொள்வதற்காக, கோட்டம், வட்ட அலுவலகங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இங்குள்ள அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள், பல கி.மீ., பயணித்து, பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதனால் பணிகளில் சுணக்கம் ஏற்படுகிறது. ஒப்பந்ததாரர்கள் பணியை கண்காணிப்பதிலும் சிக்கல் நீடிக்கிறது.எனவே, 'நெடுஞ்சாலைத் துறையின் செயல்பாட்டை மேம்படுத்தும் வகையில், தற்போதுள்ள சில பிரிவுகள் மாற்றி அமைக்கப்பட்டு, மறுசீரமைப்பு செய்யப்படும்' என, சட்டசபையில் கடந்தாண்டு மானிய கோரிக்கையின்போது, அமைச்சர் எ.வ.வேலு அறிவித்தார். அதன்படி...திருச்சி வட்ட அலுவலக கட்டப்பாட்டில் செயல்பட்டு வரும் தஞ்சாவூர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம், இரண்டாக பிரிக்கப்பட உள்ளது. கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய கோட்டம் உருவாக்கப்பட உள்ளது துாத்துக்குடி கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தை இரண்டாக பிரித்து, கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு, புதிய கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு கோட்டம் உருவாக்கப்படுகிறதுதஞ்சாவூரில் புதிதாக ஒரு வட்ட அலுவலகம் உருவாக்கப்பட உள்ளது விழுப்புரம் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு வட்ட அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள பெரம்பலுார் கோட்டத்தை, திருச்சி வட்ட கட்டுப்பாட்டில் இணைக்கவும், திருச்சி கட்டுமானம் மற்றும் பராமரிப்பு வட்ட கட்டுப்பாட்டில் வரும் புதுக்கோட்டை கோட்டத்தை, இரண்டாக பிரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அறந்தாங்கியை தலைமையிடமாக கொண்டு புதிய கோட்டம் உருவாக்கப்படஉள்ளதுசென்னை மாநகர சாலைகள் கோட்டத்தை இரண்டாக பிரித்து, சென்னை மாநகர சாலைகள் வடக்கு மற்றும் தெற்கு கோட்டங்கள் உருவாக்கப்பட உள்ளனதிருவள்ளூர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தின் கீழ் செயல்படும் அம்பத்துார், பூந்தமல்லி பிரிவுகள், இதில் இணைக்கப்பட உள்ளன கும்பகோணம், கோவில்பட்டி, பழனி, சென்னை ஆகிய நகரங்களில் தரக் கட்டுப்பாட்டு உட்கோட்டங்கள் மற்றும் பிரிவுகளும் புதிதாக துவங்கப்படவுள்ளன திருவண்ணாமலையில் தர நிர்ணய மண்டல ஆய்வகம் அமைக்கப்பட உள்ளது. கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு தலைமை பொறியாளர் அலுவலகத்தில், ஒரு இணை தலைமை பொறியாளர் பணியிடம் உருவாக்கப்பட உள்ளதாக, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ