உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஹோலி பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து

ஹோலி பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஹோலி பண்டிகை இன்று (மார்ச் 25) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மக்களுக்கு ஹோலி பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு

நாட்டு மக்களுக்கு ஹோலி பண்டிகை வாழ்த்துகள். இந்த திருவிழா இந்தியாவின் விலைமதிப்பற்ற கலாச்சார பாரம்பரியத்தின் அடையாளமாகும். மக்களிடையே அன்பு மற்றும் சகோதரத்துவ உணர்வை மேலும் வலுப்படுத்தி, அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியை கொண்டு வர வேண்டும்.

பிரதமர் மோடி

நாட்டில் உள்ள எனது குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய ஹோலி பண்டிகை வாழ்த்துகள். வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்ட இந்த பாரம்பரிய திருவிழா உங்கள் அனைவரின் வாழ்விலும் புதிய ஆற்றலையும் புதிய உற்சாகத்தையும் கொண்டு வரட்டும்.

அமித்ஷா

அனைத்து நாட்டு மக்களுக்கும் ஹோலி பண்டிகை வாழ்த்துக்கள். இந்த மகிழ்ச்சிப் பண்டிகை மக்கள் அனைவரின் வாழ்விலும் செழிப்பு கிடைக்க வேண்டும்.

கவர்னர் ரவி

எனது சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் மகிழ்ச்சியான மற்றும் வண்ணமயமான ஹோலி வாழ்த்துக்கள். ஹோலி என்பது தீமையை நன்மை வென்றதன் அடையாளமாகும். சிறந்த உணர்வுடனும் மிகுந்த உற்சாகத்துடனும் இத்திருவிழாவை அதன் உண்மையான உணர்வோடு கொண்டாடுவோம். வண்ணங்களின் திருவிழா அனைவருக்கும் மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் வெற்றியைக் கொண்டுவந்து, நமது சமூகத்தில் அமைதி, வளம் மற்றும் சகோதரத்துவத்தை ஏற்படுத்தட்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Shankar
மார் 25, 2024 12:48

விடியா அரசு முதல்வர் ஸ்டாலின் ஹோலி பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளாரா ஓ தேர்தல் நேரமோ???


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை