உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் முதல்வர் ஸ்டாலின் உருக்கம்

நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் முதல்வர் ஸ்டாலின் உருக்கம்

சென்னை:''காலை உணவு திட்டத்தால், மாணவர்களின் பள்ளி வருகை உயர்ந்துள்ளது. இதைவிட மகிழ்ச்சியான செய்தி, வேறு எதுவும் இருக்க முடியாது. மகளிர் உரிமைத் தொகை வழியாக, பெண்களின் பொருளாதார சுதந்திரம் அதிகமாகி வருகிறது. ''நிதி வளத்தை பெருக்கும் ஆலோசனைகளை சொல்லுங்கள். காலதாமதமின்றி அனைத்து பயன்களும் மக்களை சென்றடைய, எளிதான நிர்வாக சீர்திருத்தங்களை சொல்லுங்கள்,'' என, மாநில திட்டக்குழுவுக்கு, முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.மாநில திட்டக் குழுவின் ஐந்தாவது கூட்டம், நேற்று தலைமைச் செயலகத்தில் நடந்தது. அதில் முதல்வர் பேசியதாவது:தமிழக அரசின் ஒவ்வொரு திட்டமும், எந்த அளவுக்கு மக்களுக்கு பயனுள்ள திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பதை, தாங்கள் அளித்த அறிக்கை வழியே தெரிந்து கொள்ள முடிகிறது. இந்த அறிக்கை எங்களுக்கு தரப்படும் மார்க் ஷீட்.

உரிமைத் தொகை

அரசின் ஒவ்வொரு திட்டமும், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரையும் மேம்படுத்துவதாக அமைந்துள்ளது. காலை உணவு திட்டத்தால், மாணவர்களின் பள்ளி வருகை உயர்ந்துள்ளது. இதைவிட மகிழ்ச்சியான செய்தி, வேறு எதுவும் இருக்க முடியாது. மகளிர் உரிமைத் தொகை வழியாக, பெண்களின் பொருளாதார சுதந்திரம் அதிகமாகி வருகிறது. இலவச பஸ் பயண திட்டம் காரணமாக, பெண்களின் சமூக பங்களிப்பு அதிகமாகி உள்ளது. புதுமை பெண் திட்டம் காரணமாக, கல்லுாரி செல்லும் மாணவியர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. பொருளாதாரம், கல்வி, சமூகம், சிந்தனை, செயல்பாடு ஆகிய ஐந்தும் ஒருசேர வளர வேண்டும். அதுதான் திராவிட மாடல் வளர்ச்சி. கடந்த மூன்று ஆண்டுகளாக எண்ணற்ற திட்டங்களை தீட்டினோம். இன்னும் புதிய திட்டங்கள் வர இருக்கின்றன.மாநில திட்டக்குழு வழியாக புதிய சிந்தனைகளை, திட்ட வடிவங்களை எதிர்பார்க்கிறேன். கவனம் பெறாத துறைகளில் கவனம் செலுத்தி, புதிய திட்டங்களை உருவாக்க வேண்டும். கல்லுாரி மாணவர்களுக்கான இறுதித் தேர்வு வினாத்தாள்களை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை சொல்லி இருந்தீர்கள். அது செய்யப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்யுங்கள்.

ஆலோசனை

வேளாண்மை, காடுகள், வெப்பம் அதிகரிப்பு ஆகியவை குறித்த, உங்கள் ஆலோசனைகள், துறை சார்ந்த நிர்வாக நடவடிக்கைகளாக, எந்தளவு மாறி உள்ளன என்பதையும் ஆய்வு செய்யுங்கள். நிதி வளம் இருக்குமானால், இன்னும் பல திட்டங்களை, நம்மால் உருவாக்க முடியும். நிதி வளத்தை பெருக்கும் ஆலோசனைகளை சொல்லுங்கள்.அறிவிக்கப்படும் திட்டங்கள், அனைத்து மனிதர்களையும் உடனடியாக சென்று சேர திட்டமிடுங்கள். காலதாமதமின்றி அனைத்து பயன்களையும் மக்கள் பெற்றாக வேண்டும். அதற்காக எளிதான நிர்வாக சீர்திருத்தங்களை சொல்லுங்கள். நம் ஆட்சியின் நோக்கங்களை, சாதனைகளை சொல்லும் வகையில், ஒரு கருத்தரங்கை, சென்னையில் நீங்கள் நடத்த வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.கூட்டத்தில், அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை செயலர் ரமேஷ்சந்த் மீனா, நிதித் துறை செயலர் உதயச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Mani . V
ஆக 08, 2024 04:47

மக்கள் மகிழ்ச்சியாக இல்லையே சாப்.


R S BALA
ஆக 07, 2024 19:00

உங்க ஆட்சில நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று சொல்ல வேண்டும் அதனை நீங்கள் சொல்லக்கூடாது மிஸ்டர் .முதல்வர்..


Kaliraja Thangamani
ஆக 07, 2024 17:41

ஒரு முறை முதல்வர் அவர்கள் எழும்பூர் ரயில்வே ஸ்டேஷன் பஸ் ஸ்டான்ட் பக்கும் போய் பார்க்க வேண்டும் . ரோட்டு ஓரத்தில் படுத்திருக்கும் சிறுவர்களை பார்த்த பிறகு அவர் மனா நிலை பற்றி கருத்து சொல்ல வேண்டும் .


Vijay D Ratnam
ஆக 07, 2024 15:58

உங்களுக்கென்ன மாவா, நீங்க மகிழ்ச்சியாத்தான் இருப்பீங்க. ஒரு வார்டு கவுன்சிலர் ஆவதற்கு கூட தகுதி இல்லாத ஒங்களுக்கு ங்கோப்பாருக்கு பொறவு மவன்ட்டு முதலமைச்சர் நாற்காலி நோவாம கிடைத்தால் மகிழ்ச்சியாத்தான் இருப்பீங்க. எங்களை கொஞ்சம் நினைத்து பார்க்கவேண்டாமா. நாங்க என்ன பியூஸ் கோயல் மாதிரி, ஜெய்சங்கர் மாதிரி, தேவேந்திர பட்நாவிஸ் மாதிரி, நவீன் பட்நாயக் மாதிரி, மோகன் யாதவ் மாதிரி, யோகி ஆதித்யா மாதிரி, பஜன்லால் சர்மா மாதிரி, சிவராஜ் சிங் சவுகான் மாதிரி ஒரு அறிவாளி முதலமைச்சருக்கா ஆசைப்பட்டோம். எதோ எடப்பாடி பழனிசாமி, நிதிஷ் குமார் மாதிரி ஒருத்தர் வாய்ச்சிருந்தாக்கூட பரவாயில்லேன்னு நினைத்தோம். ஆனா கெரகம், இந்த ஆண்டவன் அஞ்சு வருசத்துக்கு எங்களுக்கு தத்தி தற்குறிதான்னு மண்டைல எழுதி வச்சிப்புட்டான்.


Sridhar
ஆக 07, 2024 13:53

நீ இருப்ப, அப்பாவி மக்களை ஏமாத்தி கல்லாகட்டிட்டு பொது சொத்தை கொள்ளை அடிச்சிட்டு, சட்டம் தண்டனை பற்றியே கவலை இல்லாமல் இருந்தால், சந்தோசமாதான் இருக்கும்.


Barakat Ali
ஆக 07, 2024 12:50

மாணவர்களின் பள்ளி வருகை உயர்ந்துள்ளது ........ ஐ மீன் மாணவர்கள் படிக்க வரலை ...... சாப்பிடத்தான் வர்றாங்க ...... இதைவிட வேறு யாராவது மாணவர்களை அவமானப்படுத்திவிட முடியுமா ????


Ramesh Sargam
ஆக 07, 2024 11:29

ஆனால் தலைவரே, மக்கள் மகிழ்ச்சியாக இல்லையே. தினமும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, போதைப்பொருள் கடத்தல், கள்ளச்சாராய சாவுகள், என்று கணக்கிலடங்கா குற்றநிகழ்வுகள் தமிழகத்தில். இதையெல்லாம் மறைத்து நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று கூறுகிறீர்களே, இது நல்லாவா இருக்கு.


RAMAKRISHNAN NATESAN
ஆக 07, 2024 08:18

சந்தோசம் இருக்காதா ????


RAMAKRISHNAN NATESAN
ஆக 07, 2024 08:17

ஆனா மக்கள் ????


Minimole P C
ஆக 07, 2024 07:50

If stalin reduces corruption to 50% , the revenue for the Govt. will improve 100%. Leaving this he talks all rubish.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை