| ADDED : மார் 11, 2025 05:59 AM
தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருமொழி கொள்கை தான் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனாலும், மும்மொழி கொள்கை இரு மொழி கொள்கைக்கு எதிரானது அல்ல. இன்னொரு விரும்பிய மொழியை கட்டாயமின்றி கற்கலாம் என்பதே அது. தமிழக அரசின் செயல்பாடுகள் சரியில்லாததால் குற்றங்கள் அதிகரித்துள்ளன. அதை மடைமாற்றவே மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பாக தி.மு.க., கிளம்பி இருக்கிறது. ஹிந்தியை எதிர்ப்பதாகக் கூறி சர்ச்சையை கிளப்புகின்றனர். மத்திய அரசு எந்த இடத்திலும் ஹிந்தியை திணிக்கவில்லை. மத்திய அரசின் மும்மொழி கொள்கை தவறு என்றால், அதை சட்ட ரீதியில் அணுகி தடை ஏற்படுத்த வேண்டுமே தவிர, சாலையில் நின்று கூக்குரலிடும் வேலையை தி.மு.க.,வும், கூட்டணி கட்சிகளும் நிறுத்த வேண்டும். - தினகரன், பொதுச்செயலர், அ.ம.மு.க.,