உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அண்ணா பல்கலையில் பயோ மெடிக்கல் துறை துவக்கம்

அண்ணா பல்கலையில் பயோ மெடிக்கல் துறை துவக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அண்ணா பல்கலையில், 'பயோ மெடிக்கல்' என்ற புதிய துறை துவக்கப்பட்டுள்ளது.அண்ணா பல்கலையில் இதுவரை மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், சிவில், தொழில்நுட்பம், தகவல் மற்றும் தொலை தொடர்பு, மேலாண்மை அறிவியல், மானுட அறிவியல் மற்றும் கட்டட அமைப்பியல் போன்ற துறைகள் உள்ளன.இவற்றின் கீழ், பல்வேறு பாடப்பிரிவுகளில், இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளும், ஆராய்ச்சி படிப்புகளும் நடத்தப்படுகின்றன. இதில், பயோ மெடிக்கல் பாடப்பிரிவு, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் துறையின் கீழ் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், மருத்துவ துறையில் தொடரும் பல்வேறு தேவைகள், வளர்ச்சித் திட்டங்கள், தொழில்நுட்ப முன்னேற்றம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, பயோ மெடிக்கல் தனித்துறையாக துவக்கப்பட்டுள்ளது.சென்னை அண்ணா பல்கலையில் துணைவேந்தர் வேல்ராஜ் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், மத்திய அரசின் சுகாதாரத்துறை முதன்மை ஆலோசகர் டாக்டர் சவுமியா சுவாமிநாதன் பங்கேற்று, பயோ மெடிக்கல் துறையை நேற்று துவக்கி வைத்தார். இந்தத் துறையின் கீழ், பி.இ., பயோ மெடிக்கல், எம்.இ., பயோ மெடிக்கல் மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகள் நடத்தப்படும் என, துறையின் தலைவர் சசிகலா தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Vijayaragavan Visuvamithiran
ஜூலை 23, 2024 22:50

சிறிய திருத்தம். முதுநிலை படிப்பு ஏற்கனவே உள்ளது. இப்பொழுது புதிதாக தொடங்கப்பட்டது இளநிலை பொறியியலில் பிரிவு. - முன்னாள் மாணவன்


Responsible
ஜூலை 23, 2024 13:25

நீ ஒரு அராபியன். இல்லாத ஆரிய இனம் பற்றி பேசவே உனக்கு தகுதி இல்லை.


Barakat Ali
ஜூலை 23, 2024 10:35

ஆரியப்பெண்மணி ஏன் ????


Vijayaragavan Visuvamithiran
ஜூலை 23, 2024 22:56

சவுமியா சாமிநாதன் அவர்கள் தமிழகத்திலே பிறந்து பசுமை புரட்சிக்கு வித்திட்ட அறிவியலாளர் எம்.ஸ்.சாமிநாதன் அவர்களின் புதல்வி. உலக சுகாதார நிறுவனத்தின் முன்னால் தலைமை ஆராய்ச்சியாளர்.


Barakat Ali
ஜூலை 23, 2024 10:02

இப்படிப்பு மும்பை ஐஐடி யில் சுமார் முப்பதாண்டுகளாக உள்ளது .. திராவிட மாடல் வளர்ச்சி மிகவும் பின்தங்கியுள்ளது. சுருட்டுவதில் உள்ள ஆர்வம் வேறெதிலும் இல்லை..


Sriram Raghavendiran
ஜூலை 23, 2024 13:41

இந்தச் செய்தியை சரியாக வாசிக்கவும். பயோ மெடிக்கல் புதிதாக தொடங்கவில்லை, இதற்கு முன் இந்த துறை எலக்ட்ரானிக் கீழ் இயங்கி கொண்டு இருந்தது, இப்பொழுது தனி துறையாக கொண்டு வரப்பட்டது. "எலக்ட்ரானிக்ஸ் துறையின் கீழ் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், மருத்துவ துறையில் தொடரும் பல்வேறு தேவைகள், வளர்ச்சித் திட்டங்கள், தொழில்நுட்ப முன்னேற்றம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, பயோ மெடிக்கல் தனித்துறையாக துவக்கப்பட்டுள்ளது".


Kasimani Baskaran
ஜூலை 23, 2024 05:48

38 ஆண்டுகளுக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டு எங்கள் கல்லூரியில் இப்படிப்பட்ட துறை ஒன்று இருந்துகொண்டு வரத்தான் செய்கிறது.


மேலும் செய்திகள்