உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆம்ஸ்ட்ராங் கொலையாளிக்கு அடைக்கலமா? ரஜினி பட இயக்குனர் மனைவியிடம் விசாரணை

ஆம்ஸ்ட்ராங் கொலையாளிக்கு அடைக்கலமா? ரஜினி பட இயக்குனர் மனைவியிடம் விசாரணை

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் ரவுடி, 'சம்பவம்' செந்திலின் கூட்டாளிக்கு அடைக்கலம் கொடுத்தாரா என்ற கோணத்தில், ரஜினி பட இயக்குனரின் மனைவியிடம், தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், ரவுடிகள், கூலிப்படையினர், வழக்கறிஞர்கள் என, 24 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடிகளான, 'சம்பவம்' செந்தில், சீசிங் ராஜா ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். அதில், செந்தில், வெளிநாட்டிற்கு தப்பி விட்டதாகவும் கூறப்படுகிறது.செந்திலின் வலது கரமாக, ரவுடி மொட்டை கிருஷ்ணன் செயல்பட்டு வந்துள்ளார். அவர் தான் ஆம்ஸ்ட்ராங் நடவடிக்கையை ரகசியமாக கண்காணித்த முக்கிய புள்ளி என்றும் கூறப்படுகிறது. மொட்டை கிருஷ்ணனை மையமாக வைத்து தான், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு சதி திட்டம் தீட்டப்பட்டது என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால், செந்தில், மொட்டை கிருஷ்ணன், சீசிங் ராஜா மற்றும் அவரது கூட்டாளிகளின் மொபைல் போன் தொடர்புகள் குறித்த தகவல்களை சேகரித்து போலீசார் ஆய்வு செய்தனர்.அப்போது, கொலை நடப்பதற்கு முன்னும், பின்னும் நடந்த ஒரு சில தொடர்புகள், போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தின. அதிலும் குறிப்பாக, ரஜினி நடித்த, 'ஜெயிலர்' படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமாரின் மனைவி மோனிஷா, ரவுடி மொட்டை கிருஷ்ணனுடன் பல முறை மொபைல் போனில் பேசியிருப்பது தெரியவந்துள்ளது. அவரிடம் தனிப்படை போலீசார் விசாரித்துள்ளனர். 'கொலை நடந்த பின், மொட்டை கிருஷ்ணன் உங்களை தொடர்பு கொண்டது ஏன்; அவருடன் உங்களுக்கு எப்படி தொடர்பு ஏற்பட்டது; அவருக்கு அடைக்கலம் கொடுத்தீர்களா; வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல உதவி ஏதேனும் செய்தீர்களா?' என்ற கோணத்தில் விசாரித்து, அவரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர். இதையடுத்து, நெல்சன் திலீப்குமாரிடமும் விசாரிக்க இருப்பதாகவும், தனிப்படை போலீசார் தெரிவித்தனர்.

வக்கீ்ல் மூலம் நோட்டீஸ்

இந்நிலையில் மொட்டை கிருஷ்ணனுக்கு ரூ. 75 லட்சம் கொடுத்ததாக நெல்சன் மனைவி மோனிஷா மீது புகார் எழுந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்து மோனிஷா சார்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் மூலம் தாம் எந்த பணமும் தரவில்லை எனவும், தவறான தகவல் எனவும் போலீஸ் விசாரணைக்கு அழைத்தால் ஒத்துழைப்பு தர தயராக இருப்பதாக விளக்கம் அளித்துள்ளார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

அப்புசாமி
ஆக 21, 2024 16:54

சினிமா, அரசியல், கள்ளக்கடத்தல், கட்டைப் பஞ்சாயத்து எல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணு.


Ramakrishnan Sathyanarayanan
ஆக 21, 2024 15:18

விஜய் பட இயக்குநர் என்று எழுதுங்கள்


Gurusamy
ஆக 21, 2024 10:11

அதென்ன ரஜினி பட இயக்குனர்? விஜய் தெரியவில்லையா


angbu ganesh
ஆக 21, 2024 10:54

அதானே அணில் இப்போ SAFE என்ன அரசியல் கட்சி தொடங்கிட்டார் அதனால அவரை ஈசியா தொட முடியாது இவனுங்க கட்சி ஆரம்பிக்கறதே இவனுங்களையும் சொத்தையும் காப்பாத்தத்தானே


நிக்கோல்தாம்சன்
ஆக 21, 2024 08:48

ரஜினி பெயரை இதில் கோர்த்து விட சொன்ன அந்த உடன்பிறப்பு யாரு?


Anbuselvan
ஆக 21, 2024 08:37

தயவு தாட்சண்யம் பார்க்காமல் ஊழலின்றி எல்லோரையும் தூக்கி உள்ளே வையுங்க.


raja
ஆக 21, 2024 07:54

சட்டமடா ஒளுங்குடா திருட்டுடா திராவிடம் டா மாடல்டா காரி துப்புடா.. எலே சின்னவன் எட்ரா வண்டிய கோவால் புறத்துக்கு..


N.Purushothaman
ஆக 21, 2024 06:55

இந்த செய்திக்கு ரஜினி பட இயக்குனருன்னு சொல்ல வேண்டிய அவசியம் என்ன இருக்கு ?


chennai sivakumar
ஆக 21, 2024 07:58

நெத்தியடி கொடுத்தீர்கள்


angbu ganesh
ஆக 21, 2024 10:53

விட்டா இதற்கும் ரஜினிக்கும் சம்பந்த படுத்தி விடுவானுங்க


Svs Yaadum oore
ஆக 21, 2024 06:08

விடியல் ஆட்சியில் ஊரெங்கும் கொலை கொள்ளை பாலியல் குற்றம் .....கிருஷ்ணகிரியில் ஒரு பள்ளியில் 12 வயது சிறுமியிடம் பாலியல் குற்றம் ....போலி NCC கேம்ப் நடத்தி ஏமாற்றியுள்ளார்கள் ....ஒரு பள்ளி போலி NCC காம்ப் நடத்த முடியுமா ??....போலியாக NCC கேம்ப் நடத்த முடியும் என்றால் எதற்கு மாவட்ட கல்வி அதிகாரி , , கல்வி அமைச்சர் என்று இவர்கள் எல்லாம் எதுக்கு?? ..அரசாங்கமா இது ....படு கேவலமான அரசாங்கம் ....இதில் தமிழ் நாடு படித்து முன்னேறிய மாநிலமாம் ....தமிழ் நாட்டை வளர்ந்த ஐரோப்பா நாடுகளுடன்தான் ஒப்பிட வேண்டுமாம் ...அந்த அளவுக்கு வளர்ச்சி ....


S R Rajesh
ஆக 21, 2024 10:24

காப்பி பேஸ்ட் பண்ணாம புது கருத்தை போடுங்கய்யா ....


Svs Yaadum oore
ஆக 21, 2024 06:04

இது என்ன ஆட்சியா நடக்குது?? ..அனுமார் வால் போல் இந்த கொலை வழக்கு நீண்டு கொண்டே போகிறது ....இந்த சினிமா கூட்டம் மொத்தமும் விடியல் திராவிட மதம் மாற்றிகள் .....கிருஷ்ணகிரியில் ஒரு பள்ளியில் 12 வயது சிறுமியிடம் பாலியல் குற்றம் ....போலி NCC கேம்ப் நடத்தி ஏமாற்றியுள்ளார்கள் ....ஒரு பள்ளி போலி NCC காம்ப் நடத்த முடியுமா ??....இது போலி என்று சென்னை NCC கமாண்டர் அறிக்கை ....போலியாக NCC கேம்ப் நடத்த முடியும் என்றால் எதற்கு மாவட்ட கல்வி அதிகாரி , பள்ளி தாளாளர் , கல்வி அமைச்சர் என்று இவர்கள் எல்லாம் எதுக்கு?? ...படு கேவலமான அரசாங்கம் ....


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை