உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜாதியவாத பித்துநிலை உளவியல் தலித்துகளிடம் பரவுவது வேதனை

ஜாதியவாத பித்துநிலை உளவியல் தலித்துகளிடம் பரவுவது வேதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி வாலிபர் முகமது ஆஷிக் வெட்டி கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து, ''ஆதிக்க ஜாதியவாதக் கும்பலின், 'பித்துநிலை உளவியல்' தற்போது தலித்துகளிடையேயும் பரவுவது வேதனைக்குரியது,'' என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியிருக்கிறார்.

அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

தர்மபுரி அருகே இலக்கியம்பட்டியில் தொப்பி வாப்பா பிரியாணி உணவகத்தில், ஒரு சமூக விரோத கும்பல் நுழைந்து, அங்கே பணியாற்றிய முகமது ஆஷிக் என்பவரை கொடூரமாக கொலை செய்துள்ளது. இந்த காட்டுமிராண்டித்தனத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டிக்கிறது. படுகொலையை திட்டமிட்டவர்கள், கொலையாளிகளை ஏவியவர்கள் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்து, குண்டர் தடுப்புக் காவலில் சிறைப்படுத்த வேண்டும். எங்கள் கட்சி முக்கிய தலைவர்கள் படுகொலையான முகமது ஆஷிக் குடும்பத்தினருக்கு சந்தித்து ஆறுதல் கூறினர். ஆறுதல் நிதியாக 50,000 ரூபாய்- வழங்கியுள்ளனர்.மிகப்பெரும் இழப்பைச் சந்தித்துள்ள ஜாவித் குடும்பத்தினருக்கு நீதி கிட்டும் வரை தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களைச் சார்ந்த இயக்க முன்னோடிகள், அவர்களோடு இணைந்து செயலாற்ற வேண்டுகிறேன்.இதுபோன்ற ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் தேவை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஆதிக்க ஜாதியவாதக் கும்பலின், 'பித்துநிலை உளவியல்' தற்போது தலித்துகளிடையேயும் பரவுவது வேதனைக்குரியது. இப்போக்கைத் தடுத்து நிறுத்த, தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 50 )

சுலைமான்
ஆக 03, 2024 21:21

உனக்கென்னப்பா...


Thagadooran
ஆக 03, 2024 20:14

அறிக்கையில் உள்ள சமூக விரோதிகள் என்பதற்கு பதிலாக சாதிவெறியுடன் உள்ள தலீத்கள் என கூறவும்


Thagadooran
ஆக 03, 2024 20:12

கொலை செய்தவர்கள் சமூக விரோதிகள் அல்ல சாதிவெறியுடன் உள்ள தலீத்கள் செய்த சாதி ஆணவ படுகொலை


Ms Mahadevan Mahadevan
ஆக 03, 2024 18:01

மக்களை பிரித்து ஜாதி வெறியை துண்டும் நபர்


Ms Mahadevan Mahadevan
ஆக 03, 2024 17:58

இவர் அரசியலுக்கு வரும் முன் ஏ வ்வளவு சொத்து வைத்திருந்தார்? இப்போ ஏவ்வளவு சொத்து வைத்திருக்கிறார்? ஜாதியை சொல்லி அரசியல் செய்யும் .........


அருண் பிரகாஷ் மதுரை
ஆக 03, 2024 15:06

தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமா..பழைய குற்றவாளிகளை கண்காணிக்க இங்கு ஆள் பற்றாக்குறை உள்ளது..அப்புறம் புதிதாக கொலைக் குற்றங்கள் வேறு நடக்கிறது..அதையும் கவனிக்க முடியவில்லை..இப்போ உங்க ஆளுங்க இப்படி செய்வதை கண்காணிக்க தனியாக கூடுதல் கவனம் செலுத்தச் சொன்னால் என்ன செய்ய முடியும்..கொலை என்றால் கொலை தான்.அதற்கு காவல்துறை நடவடிக்கை எடுக்கும்...வேறு என்ன செய்ய முடியும்..கொலைக்கு புதுப் புது பெயர் வைக்கிறீர்கள்.தலித்துகளின் சாதி ஆணவப் பித்து நிலைக் கொலை...அதற்கு தனி கவனம் காவல்துறை செலுத்த வேண்டுமா..


Godyes
ஆக 03, 2024 14:16

பௌத்த மதத்தின் கொள்கையே அஹிம்சாவாதம்.அதாவது எந்த உயிருக்கும் ஊறு செய்யாமை. அது தோன்றிய இந்தியா தவிர வேறெந்த நாடும் அதை சரியாக பின்பற்றுவதில்லை. அது மதக்கொள்கையின் குறைபாடல்ல.அதை பின்பற்றாதவர்களின் குறைபாடு.


RAMAKRISHNAN NATESAN
ஆக 03, 2024 14:09

ஆபத்து விளைவிக்கப் புறப்படும் தவறான கொள்கையும் அதே போன்றதொரு கொள்கையை விரைவில் சந்திக்கும் ......


Bala
ஆக 03, 2024 13:23

ராயபக்சாவினுடையத்தைச் சாப்பிட்டு மாதிரி


Sridhar
ஆக 03, 2024 12:47

இந்த ஆளு ED சிபிஐ ஐ கண்டாக்கூட இவ்வளவு பயப்படமாட்டான் போலருக்கு அப்படி என்னய்யா பயம்? ஒன்னோட சொந்த சமூக மக்கள் கஸ்டப்பட்டபோதுகூட நீ இவ்வளவு பொங்கல?


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை