உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெளிநாட்டு கைதிகளுடன் ஜாபர் சாதிக் தொடர்பு அம்பலம்

வெளிநாட்டு கைதிகளுடன் ஜாபர் சாதிக் தொடர்பு அம்பலம்

சென்னை:போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக, சென்னை, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு கைதிகளுடன், ஜாபர் சாதிக் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது.டில்லியில் கைதான தி.மு.க., முன்னாள் நிர்வாகியும், சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவனுமான ஜாபர் சாதிக், 10 நாள் காவலில் விசாரிக்கப்பட்டு உள்ளார். அவரது கூட்டாளி சதானந்தம் என்பவரையும், மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்து ஒரு நாள் காவலில் விசாரித்துள்ளனர். இவர்களின் மொபைல் போன்கள், வங்கி கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.வெளிநாட்டு தொடர்புகள் குறித்து, ஜாபர் சாதிக்கிடம் விசாரித்த போது, போதை பொருள் கடத்தல் தொடர்பாக, பல்கேரியா, ருவாண்டா, தெற்கு சூடான் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றதாக கூறியுள்ளார். இவர், தெற்கு சூடானில் இருந்த போது, சென்னை புழல் சிறையில் இருந்து, 'வாட்ஸாப்' வாயிலாக தொடர்பு கொள்ளப்பட்டுள்ளது. தொடர் விசாரணையில், போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தண்டனை பெற்று, சென்னை புழல் மற்றும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுடன் ஜாபர் சாதிக் தொடர்பில் இருந்ததும், இவர்களை பயன்படுத்தி போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.வெளிநாட்டு கைதிகள், சில ஆண்டுகளுக்கு முன், கட்டில், மெத்தை என, சகல வசதிகளுடன், சிறையில் சொகுசு வாழ்க்கை நடத்தியதும்; 'வாட்ஸாப்'பில், 'வீடியோ' அழைப்பு வாயிலாக, உறவினர்கள் மற்றும் கூட்டாளிகளுடன் பேசி, போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதும் வெளிச்சத்திற்கு வந்தது. மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறுகையில், 'தொழில் ரீதியாக, ஜாபர் சாதிக்கின் வெளிநாட்டு தொடர்புகள் குறித்து விசாரித்து வருகிறோம்.இவர், போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக, சென்னை வளசரவாக்கத்தில் தங்கி இருந்த விடுதலை புலிகள் அமைப்பின் உளவுப்பிரிவு முன்னாள் நிர்வாகி சபேசன் என்பவருடனும் தொடர்பில் இருந்ததும் தெரியவந்துள்ளது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ