உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அறுவை சிகிச்சைக்கு பின் ஈஷா திரும்பினார் ஜக்கி வாசுதேவ்

அறுவை சிகிச்சைக்கு பின் ஈஷா திரும்பினார் ஜக்கி வாசுதேவ்

தொண்டாமுத்தூர்: கோவை ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குருவிற்கு, மார்ச் 17ம் தேதி, டில்லி அப்பல்லோ மருத்துவமனையில், மூளை அறுவை சிகிச்சை நடந்தது. சிகிச்சை முடிந்து ஓய்வில் இருந்த அவர், நேற்று விமானம் மூலம் கோவை திரும்பினார். அவருக்கு ஏராளமான பொதுமக்களும், தன்னார்வலர்களும் கோவை விமான நிலையத்தில் திரண்டு வரவேற்பு அளித்தனர். அதோடு, கோவை விமான நிலையத்திலிருந்து ஈஷா வரையிலும், சாலையோரங்களில் உள்ளூர் கிராம மக்கள் ஒன்று கூடி, வரவேற்பு அளித்தனர்.பழங்குடியின மக்கள் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள், ஈஷாவின் நுழைவு வாயிலான மலைவாசலில் ஒன்று கூடி, மலர் தூவியும், பாரம்பரிய இசைக்கருவிகள் இசைத்தும், உணர்ச்சி பூர்வமான வரவேற்பு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை