சென்னை:முதல்வர் ஸ்டாலின் எழுதிய, 'நாடாளுமன்ற தேர்தல் 2024 - 40/40 தென் திசையின் தீர்ப்பு' நுாலில், தேர்தலில் வெற்றி பெற, தி.மு.க., எடுத்த நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் இடம்பெற்றுள்ளன.லோக்சபா தேர்தலில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 40 லோக்சபா தொகுதிகளிலும், தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்றது. இதை பெற்றது எப்படி என்பதை விளக்கும் நுாலை, முதல்வர் ஸ்டாலின் எழுதி உள்ளார். இந்நுால் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் வெளியிட, பொருளாளர் டி.ஆர்.பாலு பெற்றுக் கொண்டார். இதில், ஸ்டாலின் அமைத்த தேர்தல் வியூகம், 'இண்டி' கூட்டணி கூட்டங்கள், ஓட்டுச்சாவடி பொறுப்பாளர்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சி, கூட்டணி தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை, முதல்வர் பிரசார கூட்டங்கள், பேச்சுக்கள், முதல்வர் சிறப்பு பேட்டிகள், தேர்தல் விளம்பரங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.மேலும், தி.மு.க., தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் வெற்றி பெற்ற தேர்தல்கள், அதன் புள்ளிவிபரங்கள் படங்களுடன் இடம் பெற்றுள்ளன. தி.மு.க., வெற்றியை ஆவணமாக, இப்புத்தகம் பதிவு செய்துள்ளது.***