உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜனநாயகத்தில் நீதித்துறை பங்களிப்பு மதிப்பற்றது: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

ஜனநாயகத்தில் நீதித்துறை பங்களிப்பு மதிப்பற்றது: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆக்ஸ்போர்டு: ''தேர்தல்கள் என்பது இந்தியாவின் அரசியல் அமைப்பு ஜனநாயகத்தை பிரதிபலிக்கிறது. அதே நேரத்தில் நீதிபதிகள், அரசியலமைப்பு மாண்புகள் தொடர்வதையும், அது பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்கின்றனர்,'' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் குறிப்பிட்டார்.ஐரோப்பிய நாடான பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலையின் மாணவர் விவாத அமைப்பான ஆக்ஸ்போர்டு யூனியன் சொசைட்டி நடத்திய நிகழ்ச்சியில், நம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:தேர்தல்கள் என்பது, அரசியலமைப்பு ஜனநாயகத்தை பிரதிபலிக்கின்றன. அதே நேரத்தில், சில காரணங்களால், நீதிபதிகள் தேர்வு செய்யப்படுவதில்லை. நீதிபதிகள், அரசியலமைப்பு சட்டத்தின் மதிப்புகள் தொடரப்படுவதையும், அது பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்கின்றனர்.ஜனநாயகத்தில், நீதித்துறை முக்கிய பங்களிப்பை அளிக்கிறது. மிகச் சிறந்த சமூகத்தை உருவாக்குவதிலும், அது பாதுகாக்கப்படுவதிலும், ஜனநாயகத்தில், நீதித்துறையின் பங்கு உள்ளது.கடந்த, 24 ஆண்டுகளாக நீதிபதியாக இருந்துள்ளேன். ஆனால், எந்த ஒரு அரசியல் நெருக்கடியையும் சந்தித்ததில்லை. அரசியலில் இருந்தும், அரசிடம் இருந்தும், நீதித்துறை விலகியே உள்ளது. அதே நேரத்தில், ஒரு வழக்கில் தீர்ப்பு அளிக்கும்போது, அதனால், சமூகத்தில், அரசியலில், அரசில் ஏற்படக் கூடிய தாக்கங்களை நாங்கள் பார்க்க வேண்டும். அதற்காக நாங்கள் அரசியலுடன் தொடர்புடையவர்கள் என்று கூறக் கூடாது.ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்களுக்கு திருமண அங்கீகாரம் அளிப்பது தொடர்பாக தனிப்பட்ட முறையில், அதை நான் ஆதரிக்கிறேன். அதே நேரத்தில், இது தொடர்பான வழக்கின் தீர்ப்பின்போது, அதனால், சமூகத்தில் ஏற்படக் கூடிய தாக்கம், அரசு நிர்வாகத்தில் ஏற்படக் கூடிய பாதிப்புகளை கவனிக்க வேண்டியிருந்தது.மேலும், இது தொடர்பாக சட்டத்தில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை நாங்கள் கவனிக்க வேண்டிஉள்ளது. அதனால், சட்ட அங்கீகாரம் அளிக்க மறுத்தோம். அதே நேரத்தில், இது தொடர்பாக சட்டம் இயற்றும் அதிகாரம் பார்லிமென்டுக்கே உள்ளது என்பதை குறிப்பிட்டோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

R K Raman
ஜூன் 06, 2024 23:32

கேஜ்ரிவால் ஜாமீன் ஏன் கொடுக்கப் பட்டது இதுவே ஜனநாயக கடமையா?


சுலைமான்
ஜூன் 06, 2024 17:53

நீதித்துறைதான் நாட்டில் ஊழலுக்கு காரணம். நீதிபதிகளின் சொத்துக்களை கண்காணிக்க தனி ஆணையம் நியமிக்கப்பட வேண்டும்


Varadachari Srivatsangan
ஜூன் 06, 2024 16:38

ஜனநாயகத்தை காப்பாற்றினோம்.


Sridhar
ஜூன் 06, 2024 15:50

அதேதான் நாங்களும் சொல்றோம். உங்களைப்போன்ற ஆட்களினாலே நீதித்துறைக்கு சுத்தமா மதிப்பே இல்லாம போகுது. மொதல்ல விடுமுறை நாட்களை ரத்து செஞ்சுட்டு வேலைய பாருங்கய்யா. அதுக்கப்புறம் வெளிநாட்டுக்கு போயி லக்ச்சரெல்லாம் கொடுக்கலாம்.


venugopal s
ஜூன் 06, 2024 15:06

மத்திய பாஜக அரசு என்ற சண்டிக்குதிரையை அடக்கி கட்டுக்குள் வைத்த பெருமை எதிர்க்கட்சிகளை விட உச்சநீதி மன்றத்துக்கே உரியது, பாராட்டுகள்!


அருண் பிரகாஷ் மதுரை
ஜூன் 06, 2024 14:55

இந்தியாவில் ஊழலை ஒழிக்க முடியாமல் போனதற்கு நாடாளும் அரசு காரணமில்லை..நீதிமன்றமும் சட்டமும் தான் காரணம். ஊழல் செய்து கடுமையாக தண்டனை பெற்ற 10 பேரை சொல்ல முடியாது. காரணம் ஊழல் செய்தாலும் கீழமை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை குறைந்தது 15 வருடம். அப்புறம் தீர்ப்பு. அப்புறம் நீங்கள் தலையிட்டு ஜாமீன் கொடுப்பீர்கள் இல்லை தீர்ப்பை நிறுத்தி வைப்பீர்கள். இப்படி நீங்கள் நடந்து கொண்டால் எப்படி ஊழல் ஒழியும். இதில் என்ன ஜனநாயகம் இருக்கிறது. தவறு நடக்க துணை போவது ஜனநாயகம் என்றால் நீங்கள் சொல்லும் கூற்று சரி..


மொட்டை தாசன்...
ஜூன் 06, 2024 14:24

நீங்கள்தான் மெச்சிக்கொள்ளவேண்டும் .


Vathsan
ஜூன் 06, 2024 12:15

சந்திரசூட் ஒருவர் தான் இந்திய நீதித்துறையை தாங்கி பிடிக்கிறார். நிறைய வடநாட்டு நீதிபதிகள் மத்திய அரசுக்கு கூஜா தூக்குபவர்கள். இன்னும் நீதித்துறை மீது நம்பிக்கை இருக்கிறது.


hari
ஜூன் 06, 2024 21:50

சந்திரசூட்டையே தாங்கி பிடித்து முட்டு கொடுப்பார் வத்தசன்


ஆரூர் ரங்
ஜூன் 06, 2024 11:24

ஆயுள்தண்டனை பெற்ற லட்சத் தீவு எம்பியின் தண்டனையை நிறுத்தி வைக்க கோர்ட் கூறிய காரணம் என்ன?. மக்களுக்கு சேவை செய்ய MP இல்லாவிட்டால் தொகுதிக்கு நல்லதல்ல. மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதே. இதே தண்டனையை ஒரு சாமானியன் பெற்று அப்பீல் செய்தால் அவரது குடும்பத்தைக் காப்பாற்ற ஏதுவாக தண்டனைக்கு தடையுத்தரவு அளிப்பார்களா? நீதிபதிகளுக்கும் நோபல் பரிசு மாதிரி ஒன்றை நிறுவ வேண்டும்


T.S.SUDARSAN
ஜூன் 06, 2024 11:18

நீதி துறை செத்துவிட்டது. மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை. அரசியல் மற்றும் பணம் படைத்தவர்கள், தீவிரவாதிகள், ஆகியோர் நீதி 30 வருடங்களுக்குள் தீர்க்கப்படவில்லை. மேலும் இன்றைக்கும் அவர்கள் தன்னுடைய நீதிக்கு தீர்ப்பு வரக்கூடாது என்று ஊராபோட்டு தப்பிவிடுகிறார்கள் .


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை