உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 10ம் வகுப்பு தமிழ் பாடத்தில் கருணாநிதி வாழ்க்கை வரலாறு

10ம் வகுப்பு தமிழ் பாடத்தில் கருணாநிதி வாழ்க்கை வரலாறு

சென்னை:பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்று பாடம், புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.வரும் ஜூன் 1ல் புதிய கல்வி ஆண்டு துவங்க உள்ளது. அதையொட்டி, பல்வேறு வகுப்புகளின் பாடங்கள் திருத்தம் செய்யப்பட்டு, புதிய புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன.புதிய கல்வி ஆண்டுக்கான பாட புத்தகத்தில், 10ம் வகுப்பில் தமிழ் பாடத்தில், கலை என்ற பிரிவில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு குறித்த பாடம், 'பன்முக கலைஞர்' என்ற தலைப்பில் இடம் பெற்று உள்ளது.மொத்தம் ஐந்து பக்கங்கள் நிறைந்த இந்த பாடத்தில், கருணாநிதியின் பெற்றோர் பெயர், அவரது பிறந்த நாள், பள்ளிப் படிப்பு, இலக்கியப் பணி, அரசியல் நிகழ்வுகள் என, 11 பிரிவுகளில், அவரது செயல்பாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இறுதியாக, அவர் மறைந்த நாள் குறிப்பிடப்பட்டு, மு.க., என, அவரது கையெழுத்தும், கருணாநிதியின் படமும் இடம் பெற்றுள்ளது.ஏற்கனவே, 9ம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில், கருணாநிதி குறித்த சிறிய பகுதி இடம்பெற்றுள்ளது. அதில், அவரது இலக்கிய பணிகள் குறித்த அம்சங்கள் உள்ளன. கடந்த, 2011ல் அறிமுகமான, சமச்சீர் கல்வி பாடப் புத்தகத்தில், கருணாநிதி குறித்தும், தி.மு.க., அரசின் சாதனைகள் குறித்தும் பாடங்கள் இடம் பெற்றிருந்ததை, அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், அப்பகுதிகள் கருப்பு மையால் அழிக்கப்பட்டு நீக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

sugumar s
மே 02, 2024 12:56

ரொம்ப அநியாயம் லியோனி ஜால்ரா


vbs manian
மே 02, 2024 08:59

என்ன கொடுமை தனி மனித வெறுப்பு ப்ராமண காழ்ப்புணர்ச்சி வன்முறை ஊக்குவிப்பு ஊழல் இலக்கணம் கொண்டாடப்படுகிறது தமிழகத்துக்கு பெருமை சேர்த்த எவ்வளவோ நல்லவர் உள்ளனர் தமிழ் சமுதாயத்துக்கு சவுக்கடி


Rajarajan
மே 02, 2024 07:51

வனவாசம் புத்தகத்திலிருந்து, இவரை பற்றி எடுத்து அச்சிட தைரியம் உள்ளதா ?? அது இருக்கட்டும் இவரைப்பற்றி இவரது குடும்ப வாரிசுகள், திராவிட அரசியல்வாதிகள், திராவிட அல்லக்கைகள் படிப்பதில்லை தெரியுமா ?? எப்படி ?? இவர்கள் வாரிசுகள் மட்டும் தனியார் பள்ளிகள் மற்றும் வெளிநாடுகளில் படிப்பர் அங்கு கருணாநிதி பற்றி பாடம் இல்லை ஆகமொத்தம், தமிழகத்தில் அப்பாவி ஏழை பாழய் / அடித்தட்டு மக்களின் வாரிசுகள் மட்டும், மூளைச்சலவை செய்யப்படுகின்றனர் அவர்கள் மட்டும் வெளியுலகம் தெரியாமல், இவர்களின் குடும்பத்தை தொடர்ந்து பல்லக்கில் வைத்து சுமக்கவேண்டும் இதை உடனே தடுத்து நிறுத்தவேண்டும் மற்ற அரசியல் கட்சிகள் எங்கே போயின ?? எல்லை மீறுகின்றனர் திராவிட அரசியல் கட்சியினர் பொறுத்தது போதும், பொங்கியெழு


Mani . V
மே 02, 2024 04:46

மாணவர்கள் எப்படி வாழக் கூடாது இணைவி, துணைவி, ஊழல், என்பதற்காக இதை பாடமாக வைத்து இருப்பார்களோ?


Dharmavaan
மே 02, 2024 04:23

நாட்டை கொள்ளை அடித்த திருடனுக்கு தனி நாடு /சுயாட்சி கேட்கும் பிரிவினைவாதிக்கு சரித்திரத்தில் இடமா


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ